சென்னை: நாளை(நவ.,4) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம் மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் ஏடுத்தியம்புகிறது.
அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிர செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும் ஒற்றுமையையும் வளமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவட்டும், மக்கள் நல்ல ஆரோக்கியம், வளம் பெற்று வாழ வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE