சூலூர்:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பணம் வேகமாக காலியாகியது.தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொழிலாளர்களுக்கு, கடந்த மாத சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறையை பின்பற்றுகின்றன. சம்பள பணத்தை, ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்று தொழிலாளர்கள் எடுத்துக்கொள்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, போனஸ் தொகையும், சம்பளத்தொகையும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதனால், புத்தாடைகள் எடுக்கவும், பட்டாசு, பலகாரங்கள் வாங்கவும், பண்டிகை செலவுக்கு பணம் எடுக்க ஏ.டி.எம்., மையங்களில் நேற்று மக்கள் திரள துவங்கினர்.இதனால், அனைத்து ஏ.டி.எம்.,களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், வேகமாக பணம் தீர்ந்தது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் அடுத்தடுத்த மையங்களுக்கு சென்ற வண்ணம்இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE