சிக்கண்ணா கல்லுாரி நிலம் | Dinamalar

சிக்கண்ணா கல்லுாரி நிலம்

Added : நவ 03, 2021 | |
திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர், கலெக்டரிடம் கொடுத்த மனு:சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரிக்கு, சிக்கண்ண செட்டியார், 40.8 ஏக்கர் நிலத்தை வழங்கினார். கல்லுாரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர் அமைப்பினர், கல்லுாரிக்கு, 2003ல் சுற்றுச்சுவர் கட்டினோம்.அளவீடு செய்து பார்த்தபோது, 4.50 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில்

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர், கலெக்டரிடம் கொடுத்த மனு:சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரிக்கு, சிக்கண்ண செட்டியார், 40.8 ஏக்கர் நிலத்தை வழங்கினார். கல்லுாரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர் அமைப்பினர், கல்லுாரிக்கு, 2003ல் சுற்றுச்சுவர் கட்டினோம்.அளவீடு செய்து பார்த்தபோது, 4.50 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது; தற்போதைய மதிப்பில், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்படாமல் உள்ளது. உள் விளையாட்டு அரங்கம் கட்டி, மரக்கன்றுகள் நட்டது போக, மூன்று ஏக்கர் மட்டும் காலியிடமாக உள்ளது.


விளையாட்டு ஆணையம், 12 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எதிர்கால மாணவர் தேவைக்காக, கூடுதல் கட்டட வசதி தேவை; கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கும், சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக்கூடாது. கல்லுாரி நிலத்தை பாதுகாக்க உதவ வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X