பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு அரசு பணி

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | |
Advertisement
சென்னை : சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன். ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில் இந்தியா
Mariyappan, paralympics, Government Job, CM Stalin, MK Stalin, Mariyappan Thangavelu

சென்னை : சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன். ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று பிரேசிலில் நடந்த பாராலிம்பிக்ஸ் 2016ல் தங்கம்; கடந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்சில் வெள்ளி பதக்கம் வென்றார்.


latest tamil news


பி.பி.ஏ. பட்டதாரியான தங்கவேலு மாரியப்பன் தற்போது பெங்களூரில் உள்ள 'ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா'வில் தடகள முதுநிலை பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது சர்வதேச விளையாட்டு சாதனைகளை கருத்தில் வைத்து அவரை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் விற்பனை பிரிவு துணை மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மெய்யநாதன் எம்.பி. கனிமொழி தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X