சென்னை 'உஷ்ஷ்ஷ்!': அமைச்சர்களிடம் ரிப்போர்ட் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்!

Updated : நவ 05, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (39)
Advertisement
ரிப்போர்ட்' கேட்கும் முதல்வர்!முதல்வராக ஸ்டாலின், மே 7ல் பொறுப்பேற்றார். அவரின் கீழ், செயல்படும் அமைச்சர்கள், துறையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆட்சி பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவதால், துறைகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்; புதிதாக செயல்படுத்திய திட்டங்கள்; அவற்றால் பயன் பெற்றவர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, 'டீடெய்ல்


ரிப்போர்ட்' கேட்கும் முதல்வர்!


முதல்வராக ஸ்டாலின், மே 7ல் பொறுப்பேற்றார். அவரின் கீழ், செயல்படும் அமைச்சர்கள், துறையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news


ஆட்சி பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவதால், துறைகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்; புதிதாக செயல்படுத்திய திட்டங்கள்; அவற்றால் பயன் பெற்றவர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, 'டீடெய்ல் ரிப்போர்ட்'டை, அமைச்சர்களிடம் இருந்து வாங்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தன் கட்சி எம்.எம்.ஏ.,க்களிடமும் அறிக்கை பெற உள்ளார்.

அந்த விபரத்தை தெரிந்து கொண்ட சில, 'சீனியர்' அமைச்சர்கள், இப்பவே தங்கள் துறை அதிகாரிகளை அழைத்து, முந்தைய ஆட்சியில் இருந்த நிலை, ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, தனித்தனியாக அறிக்கை தயாரிக்கச் சொல்லி இருக்காங்களாம்.பா.ம.க., கூட்டணி: ஸ்டாலின் அதிரடிலோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம்பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது.

இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., ஐந்து இடங்களில் தான் வெற்றி பெற்றது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அரசின் செயல்பாட்டையும், பா.ம.க., தலைவர்கள் கடுமையாக விமர்சிக்காமல் அடக்கி வாசிக்கின்றனர்.

அன்புமணி மகள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதையெல்லாம் வைத்து, பா.ம.க.,வை தங்கள் கூட்டணிக்குள் சேர்க்க, தி.மு.க.,வில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரும், எம்.பி., ஒருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.இது தொடர்பாக அவர்கள், தி.மு.க., மேலிடத்தில் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பேசி வருகின்றனர்.

'அ.தி.மு.க.,வை விட நம்மை அதிகம் விமர்சித்தது பா.ம.க., தான்; அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், 2019 லோக்சபா தேர்தலில் பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணியை பலரும் விமர்சித்ததை போல், நம்மையும் விமர்சிப்பர். இது சரிப்படாது' என, தலைமையில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறதாம்.ரகசியம் பேச புது வழி!


பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளை, துறையின் முக்கிய புள்ளிகள் பெரிதாக கண்டுகொள்வது இல்லை.

இதனால், அ.தி.மு.க., ஆட்சியை போலவே, ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து, அதிகாரிகள் ஆட்டம் போடுகின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் மட்டத்தில், கோஷ்டி பூசல்கள் அதிகரித்துள்ளன; இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.


latest tamil news


துறையின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் தவறான நடவடிக்கையை, மொபைல் போனில், ஒரு அதிகாரி விமர்சித்ததை ரகசியமாக 'ரெக்கார்ட்' செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். நேர்மையான அந்த அதிகாரி, மதுரைக்கு மாற்றப்பட்டார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, மொபைல் போனில் அலுவல் தொடர்பாக பேசுவதை, அதிகாரிகள் பலரும் தவிர்த்து வருகின்றனர்.

அமெரிக்க நிறுவன தயாரிப்பு மொபைல் போன் வழியாக, 'பேஸ் டைம்' என்ற 'ஆப்' வாயிலாக ரகசியமாக பேச துவங்கி உள்ளனர். இந்த மொபைல் ஆப் வழியே பேசினால், யாரும் டேப் செய்ய முடியாது என்று அதிகாரிகள் நம்புவதே இதற்கு காரணம். இதனால், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் கைகளில், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
05-நவ-202106:56:23 IST Report Abuse
பெரிய குத்தூசி ரிப்போர்ட்டை வாங்கி படிச்சிட்டாலும்? எவனோ ஒருத்தன் படிச்சி ஐடியா குடுப்பான். ரிப்போர்ட்டை படிச்சி புரிஞ்சி ஏதாவது பண்ணா தமிழ்நாடு ரூபா 200 க்கும் குவாட்டருக்கும் அடிமையாக இருக்காது
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
05-நவ-202105:20:21 IST Report Abuse
mindum vasantham unmayaaka report card il palar fail comment il comission athikam endru irunthaalum ,neet pass pannum alavukku thiramai இருப்பது போல், மீடியா துதி பாடுகின்றனர்
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
05-நவ-202102:16:54 IST Report Abuse
Venkatesh புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம் , அந்த கதையால இருக்கு ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ட்டலின் நடவடிக்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X