தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கூடாது: சத்குரு

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (15)
Advertisement
கோவை: 'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கூடாது' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ:நான் சிறுவனாக இருந்தபோது, பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயலாக இருந்தது. தீபாவளி முடிந்த பிறகும், ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை தினமும் வெடித்து மகிழ்வோம். இப்போது சுற்றுச்சூழல் மீது திடீர்
Diwali, DontBanCrackers, Sadhguru, Isha

கோவை: 'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கூடாது' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.



சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ:


நான் சிறுவனாக இருந்தபோது, பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செயலாக இருந்தது. தீபாவளி முடிந்த பிறகும், ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை தினமும் வெடித்து மகிழ்வோம். இப்போது சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர், குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது எனக் கூறுகின்றனர்; இது சரியல்ல.


latest tamil news



காற்று மாசுபாடு குறித்து கவலைப்படுபவர்கள், நீங்கள் பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்து விடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனித தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிர செய்திடுங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
04-நவ-202120:54:56 IST Report Abuse
Arasu சொல்லிட்டார் ஒரு சில மக்கள் ஒரு சில கிராமங்கள் வெடி வெடிக்காம இருகாங்க...இந்த ஆள் ஒரு கார்ப்பரேட் கொள்ளையன்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-நவ-202115:39:35 IST Report Abuse
Vijay D Ratnam மதமாற்ற மாபியா கும்பல், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கும்பல் இதன் பின்னணியில் உள்ளது. எருமை மாட்டு மேல மழை பெய்தது போல இருக்கும் ஹிந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு போனா கொரோனா வந்துடுமாம். டாஸ்மாக்குக்கு போனா கொரோனா வராதாம், சினிமா கொட்டகைக்கு போனா கொரோனா வராதாம், பஸ்ல, ரயில்ல புளிமூட்டை மாதிரி அடைச்சிக்கிட்டு போனா கொரோனா வராதாம். தடையை மீறி பட்டாசு வெடித்தால் தமிழ்நாட்டில் ஏழு கோடி பேர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்தியாவில் மருத்துவமனை தவிர்த்து அரசு அலுவலகங்கள் உட்பட அணைத்து இடங்களிலும் ஏர்கண்டிஷன் மெஷினை தடைசெய்து மீறுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று சட்டம் இயற்றிவிட்டு பட்டாசுக்கு தடைவிதிக்கலாம்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
04-நவ-202113:00:05 IST Report Abuse
Samathuvan ஆமாம் இவரு இருக்குற இடத்துல பட்டாசு வெடிக்க தடை செய்ய கூடாது ஏனெனில், அப்பத்தான் யானையெல்லாம் விரட்ட முடியும். சரிதானே கார்பொரேட் ஆசாமி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X