'பாஜ., தலைவர்களை கத்தி முனையில் மிரட்டி திரிணமுல் காங்கிரஸில் சேர்க்கின்றனர்'

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
இந்துார் : 'மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், கத்தி முனையில் மிரட்டப்பட்டு, திரிணமுல் காங்கிரசில் சேர்க்கப்படுகின்றனர்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், பா.ஜ., பொதுச் செயலரும், மேற்கு வங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:நம் நாட்டில் கத்தி முனையை பயன்படுத்தியே, இஸ்லாம் பரவியது. முகலாயர் ஆட்சியில்,


இந்துார் : 'மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், கத்தி முனையில் மிரட்டப்பட்டு, திரிணமுல் காங்கிரசில் சேர்க்கப்படுகின்றனர்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.



latest tamil news



மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், பா.ஜ., பொதுச் செயலரும், மேற்கு வங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:நம் நாட்டில் கத்தி முனையை பயன்படுத்தியே, இஸ்லாம் பரவியது. முகலாயர் ஆட்சியில், ஹிந்துக்களை கத்தி முனையில் மிரட்டி, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாறவைத்தனர்.இப்போது, மேற்கு வங்கத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் திரிணமுல் காங்கிரசில் சேர்க்கப்படுகின்றனர். யாரும் விரும்பி திரிணமுல் காங்கிரசில் சேரவில்லை.மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ., பொறுப்பாளராக இருக்கும் என் மீது மட்டும் திரிணமுல் அரசு ௨௦க்கும் அதிகமான வழக்குகளை பதிவு செய்துள்ளது.


latest tamil news



ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லா சர்வாதிகாரியாக மம்தா செயல்படுகிறார். இந்தியாவின் ஜனநாயகத்தை உலகம் பாராட்டுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் சிறிதும் இல்லை என, உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
04-நவ-202118:10:40 IST Report Abuse
Indian எனக்கு வந்தால் ரத்தம் அவனுக்கு வந்தால் தக்காளி சட்னி
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-நவ-202116:00:47 IST Report Abuse
MARUTHU PANDIAR ஒரு பழைய தமிழ் பட பாட்டு நினைவுக்கு வர்து""ஆம்பளீங்களா நீங்க ஆம்பளீங்களா""-அது தான் அந்த பாட்டு /////.படத்தின் பெயரோ-உரிமைக் குரல்.மேற்படி கட்சி மாறிகளுக்கு அஅதெல்லாம் இருக்குதா தெரியலை.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
04-நவ-202112:54:42 IST Report Abuse
Samathuvan ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். ஏன் நீங்களும் காட்டவேண்டியது தானே பணத்தை கொடுத்து ஆளையே வாங்கும் நீங்கள் ஆயுதங்களையும் வாங்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X