விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: பாலகோட் தாக்குதலில் பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்திய நம் விமானப்படை உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.இந்திய விமானப்படையின் உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் 21 ரக போர் விமானங்களை இயக்கினார். கடந்த 2019ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துன்க்வா பகுதியின் பயங்கரவாதிகள் முகாம் மீது,
Abhinandan, Wing Commander Abhinandan, Abhinandan Varthaman, Indian Air Force

புதுடில்லி: பாலகோட் தாக்குதலில் பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்திய நம் விமானப்படை உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய விமானப்படையின் உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் 21 ரக போர் விமானங்களை இயக்கினார். கடந்த 2019ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துன்க்வா பகுதியின் பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதில் பாலகோட் பகுதியில் பாக்., ராணுவ விமானத்தை அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அவர்கள் தரப்பிலான தாக்குதலில் அவரது விமானம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. அதில் உயிர் தப்பிய அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது.


latest tamil news


பின், நம் தரப்பிலான அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீடு காரணமாக அபிநந்தனை பாக்., ராணுவம் விடுவித்தது. மக்களின் வரவேற்புடன் நாடு திரும்பிய அவருக்கு, சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் அபிநந்தனுக்கு விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி உயர்வு தற்போது வழங்கப்பட்டு உள்ளது. சில நாட்களில் அவர் புதிய பொறுப்பை ஏற்பார் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian -  ( Posted via: Dinamalar Android App )
05-நவ-202107:14:44 IST Report Abuse
subramanian வாழத்துகள்
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
05-நவ-202100:17:38 IST Report Abuse
Akash No proof he shot a plane...hope we are not making heroes out of zeroes
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
04-நவ-202120:33:06 IST Report Abuse
P.MANIMARAN வாழ்த்துக்கள் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X