சென்னை : ஜம்மு காஷ்மீரில், கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த தமிழக லாரி டிரைவர்கள், புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் முயற்சியால் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கோவை மற்றும் சேலம் பகுதி லாரி டிரைவர்கள், கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் இருந்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதிக்கு சரக்கு ஏற்றிச் சென்றனர். ஜம்முவில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள ஹரிபுரா என்ற இடத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கி, உணவின்றி அவதிப்பட்டனர். கடுங்குளிரால் அவதிப்பட்ட அவர்கள், உதவி வேண்டி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டனர்.

நேற்று முன்தினம் இரவு, இது குறித்து அறிந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை, உடனே ராணுவ மேஜர் துசார்பஜிரை தொடர்பு கொண்டு, தமிழக லாரி டிரைவர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஹரிபுரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம், தமிழக லாரி டிரைவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement