புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த பட்டாசு வெடித்து தந்தை, மகன் பலி

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள்.புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக
Puducherry, Crackers, Blast, Accident, புதுச்சேரி, பட்டாசு, வெடி, விபத்து, பலி

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள்.

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டமான சின்ன கோட்டக்குப்பம் பகுதி அருகே வந்தபோது, சாக்கு மூட்டைகளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென மொத்தமாக வெடித்தது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.


latest tamil news


வெடி விபத்து நடக்கையில் சாலையில் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இருவர் மீதும் பட்டாசுகள் சிதறியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி எல்லை பகுதியில் நடந்ததால் இருமாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raajaa -  ( Posted via: Dinamalar Android App )
05-நவ-202110:41:25 IST Report Abuse
raajaa கோட்டகுப்பத்தை கோட்டாங்குப்பம் என்று செய்தி வாசிக்கிறார்கள் தமிழ் தாங்கி குடும்ப தொலைக்காட்சியில்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-நவ-202103:59:02 IST Report Abuse
மலரின் மகள் அந்தோ பரிதாபம். யாதுமறியா குழந்தையும் உயிரிழந்திருக்கிறது. வடமாவட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற குறிப்பாக காஞ்சிபுரம், ஆற்காடு மாவட்டங்கள், மற்றும் விழுப்புரம் பகுதிகளை எடுத்து கொண்டால் பட்டறை வெடிகள் என்று பிரபலமாக பல நூறாண்டுகளாக பிரசித்தமாக செய்வார்கள். எதோ கொல்லன், பட்டறையில் இரும்பு வேலைகள் செய்வதை போலவே பட்டாசு தொழில்களை தெருவோரமாக செய்வார்கள். சாதாரண பேப்பரில் மருந்துகளை சுற்றி திரிவைத்து கறியுடன் வெடி பொருளை வைத்து சிம்பிள் ஆக பட்டாசுகளை செய்வார்கள். காஞ்சிபுரம் பகுதியில் கோனேரி குப்பம்.பொன்னர் பகுதிகளில் இதை செய்வார்கள். யார் வேண்டுமானாலும் சென்று வாங்கி கொள்ளலாம். மேலும் நமது விருப்பத்திற்கு தகுந்தவாறு வெடிக்கும் வீரியத்தை கூட்டியும் வாங்கி வரலாம். திருவிழாக்களில் முக்கிய நிகழ்வாக விழாவின் முடிவு நாட்களில் பல்வேறு வகையான வெடிகளை, கம்பம் அமைத்து அதை சுற்றி சூழல் வெடிகள் மத்காப்புகள் என்று வைத்து கூட செய்வார்கள். அதில் குரங்கு பொம்மைகள், ராவணன் உருவங்கள் வைத்தும் வெடிவேடிக்கை உண்டு. நீட்டின நேரம் வெடிக்கவேண்டும், அதிக சத்தம் வேடனும், அதிக வெளிச்சம் வேண்டும் என்று செய்வார்கள். வெடி மருந்துகளை ஒரு இரும்பு உருளை போன்ற அமைப்பில்வைத்து அழுத்தம் அதிகம் கொடுத்து திரியை வைத்து சில நேரங்களில் திரிகள் தாம்பு கயிறு போல கூட இருக்கும் வான வேடிக்கை தரை வேடிக்கை என்று பட்டாசுகள் தயாரிப்பார்கள். பல்லவ சாம்ராச்சிய காலங்களிலிருந்தே இது போன்ற வழக்கம் உண்டு. பரம்பரையை தயாரிப்பதும் உண்டு. வெடி தயரிப்பில் அய்யநாடார் குடும்பம் ஸ்டாண்டர்ட் பட்டாசுகளை முதன் முதலில் சிவகாசியில் தறிக்கும் பொது தான் அது ஒரு சிறந்த கம்பனியின் பட்டாசாக குடிசை தொழில் என்றில்லாமல் சிறப்பான ஸ்டாண்டர்ட் பட்டாசுகளாவ பாதுகாப்பானவையாக மற்றும் மாசு குறைவாக உருவாக்கினார்கள். பட்டறை வெடிகள் என்று தயாரிக்கப்படும் காஞ்சிபுரத்தின் புரோகிராமங்களில் உருவாக்க படுபவை. பாதுகாப்பு குறைபாடுகளுள்ளவை. அதை நிச்சயமாக இரண்டு சக்கர வாகங்கங்களில் கொண்டு செல்லக்கூடாது. வண்டியின் சைலென்சர் மிகவும் சூடாக இருக்கும். அதில் மூட்டையில் எடுத்து சென்றிருக்கும் பட்டாசுகள் மூட்டையோடு சைலென்சரில் பட்டு சைலென்ஸரின் அதீத வெப்பம் அதற்குள் இறங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் சூதானத்தால் தானாகவே வெடித்திருக்கும். ஒன்றின் வெப்பத்திலிருந்து மற்றது என்று மொத்தமாக வெடித்திருக்கிறது. பட்டறை வெடிகளை தயாரிப்பதற்கு என்றோ அரசு தடையை விதித்து விட்டது. தயாரிப்பாளர்களை மட்டுமின்றி மூலப்பொருட்களை சப்ளை செய்தவரையும் காவல் துறை அதிகாரியையும் விசாரணை சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் உயிரிழக்கும் பரிதாபங்கள் நடவாது.
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
04-நவ-202121:05:32 IST Report Abuse
A P அது எப்படி தானாக வெடித்தது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X