புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த பட்டாசு வெடித்து தந்தை, மகன் பலி| Dinamalar

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த பட்டாசு வெடித்து தந்தை, மகன் பலி

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (5)
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள்.புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக
Puducherry, Crackers, Blast, Accident, புதுச்சேரி, பட்டாசு, வெடி, விபத்து, பலி

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள்.

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டமான சின்ன கோட்டக்குப்பம் பகுதி அருகே வந்தபோது, சாக்கு மூட்டைகளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென மொத்தமாக வெடித்தது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.


latest tamil news


வெடி விபத்து நடக்கையில் சாலையில் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இருவர் மீதும் பட்டாசுகள் சிதறியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி எல்லை பகுதியில் நடந்ததால் இருமாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X