பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு; சிதம்பரத்திற்கு பெட்ரோலிய அமைச்சர் பதிலடி

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததே பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனக்கூறிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரத்திற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையிலும், பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை
Petrol_Diesel, Price Reduce, PChidambaram, Dharmendra Pradhan, பெட்ரோல், டீசல், விலை குறைப்பு, ப சிதம்பரம், தர்மேந்திர பிரதான்

புதுடில்லி: நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததே பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனக்கூறிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரத்திற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையிலும், பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ. 5.26 காசுகள் குறைத்தது. இதனை விமர்சிக்கும் விதமாக காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 30 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கு காரணம். இவ்வளவு நாள் மத்திய அரசின் பேராசையினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது. அதிக வரி விதிப்பினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது என்பது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


இதற்கு பதிலளிக்கும் விதமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பதிவில், ‛மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியதை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்,' எனப் பதிலளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-நவ-202108:20:14 IST Report Abuse
DARMHAR வாய் சும்மா இருக்காது . அடிக்கடி தான் எதோ மகா மேதாவி என்று தன்னை நினைத்து கொண்டு ஏதாவது உளறிக்கொண்டிருப்பதே இவர் வேலை. சுய விளம்பரப்பித்தர். மழைக்காலத்தில் ஆற்று தவளை போல ஏதாவது கத்திக் கொண்டிருந்தால் தான் இவருக்கு பொழுது போகுமோ என்னவோ.?
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-நவ-202123:40:49 IST Report Abuse
DARMHAR செட்டியாருக்கு அவ்வப்போது ஏதாவது தத்து பித்து என்று பிதற்றல் இல்லாமல் இருந்தால் தூக்கம் வராது . தனது மனதில் மஹா மேதாவி என்ற நினைப்பு.. இந்த மேதாவி தான் ஓடி ஒளிந்துகொண்ட நாட்களை நினைவு கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
05-நவ-202118:40:49 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN நாட்டின் ஆப்பிள் கேந்திரமான ஹிமாச்சலில் காஷ்மீர் போன்று நெடுநாளைய மானிய விலை டீசல் எல்லாம் கிடையாது/ அவர்கள் அங்கு விளையும் ஆப்பிள்களை விற்பனைக்கு மற்ற இடங்களுக்கு அனுப்ப சாலை வசதியை மட்டுமே நம்பியிருப்பதால் டீசல் விலை அவர்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை/ வருவாய் குறைந்து விட்டது/ எனவே தங்கள் அதிருப்தியை இந்த கிடைத்த தேர்தலில் காட்டியுள்ளனர்/ இதை பார்த்து பா.ஜ கணக்கில் நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்/ எரிபொருள் விலை ஒரு சென்சிடிவ் ஆன விஷயம் என்பது உண்மை/ நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருக்கும் ர ஓநாய்களுக்கு இடம் கொடுத்து விட்டால் இப்போதெல்லாம் மீட்பது என்பது முடியாத காரியம்/ கெட்டியாகப்பிடித்துக் கொள்வான்கள்/ மலை மலையாய் ""நேர்மை"" பணமும் வெளிநாட்டு பணமும் ஸ்டாக் உள்ளதாம் / நாட்டின் ,,,மக்களின் உள்நாட்டு பாது ஆப்பு என்பது சிக்கலாகி கேள்விக் குறியாகப் போய் விடும்////நாட்டின் பாது காப்பு படை வீரர்கள் காஷ்மீரின் ஓரிரண்டு கொள்ளைக்காரக் குடும்பத்துக்கு உயிர்த் தியாகம் செய்வதற்காகவே நேர்ந்து விடப் பட்ட ஜென்மங்களாக மாற்றப்பட்டு விடுவார்கள்////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X