சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி மேலாளரின் கணவரிடம் பண மோசடி: 2 பேர் கைது

Added : நவ 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில், வங்கி மேலாளர் கணவருக்கு பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பணம் பறித்த இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.கரூர் ராமானூர் ராஜா நகரைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி அபர்ணா, 27; தனியார் வங்கி மேலாளர். இவரது கணவர் நந்தகுமாரின் மொபைல் போனுக்கு பெண்கள் சிலரின் புகைப்படத்தை கடந்த, 1ல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். பிறகு நந்தகுமாரை மிரட்டி, 49

கரூர்: கரூரில், வங்கி மேலாளர் கணவருக்கு பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பணம் பறித்த இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


கரூர் ராமானூர் ராஜா நகரைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி அபர்ணா, 27; தனியார் வங்கி மேலாளர். இவரது கணவர் நந்தகுமாரின் மொபைல் போனுக்கு பெண்கள் சிலரின் புகைப்படத்தை கடந்த, 1ல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். பிறகு நந்தகுமாரை மிரட்டி, 49 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துள்ளனர். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசில் அபர்ணா புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பண மோசடி செய்த நபர்கள், பொள்ளாச்சியை சேர்ந்த அஜித்குமார், 49; பிரசாந்த், 27; என தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு பைக், லேப்டாப், பாஸ்போர்ட், மூன்று லட்ச ரூபாய் மற்றும் நான்கு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X