குழாய் உடைப்பு, போர்வெல் பழுது: சரி செய்ய மக்கள் கோரிக்கை| Dinamalar

குழாய் உடைப்பு, போர்வெல் பழுது: சரி செய்ய மக்கள் கோரிக்கை

Added : நவ 04, 2021
Share
கரூர்: கரூர் நகராட்சி பகுதியில், பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர், சாக்கடை கால்வாய் மற்றும் சாலையில் செல்கிறது. போர்வெல் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்குகள் சேதமடைந்துள்ளன.கரூர் நகராட்சியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், தண்ணீர் திறக்கப்படும் போது குடிநீர் வீணாகிறது. குறிப்பாக, ஆர்.டி.ஓ., சாலை, தின்னப்பா கார்னர், ராமகிருஷ்ணாபுரம், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம்

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில், பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர், சாக்கடை கால்வாய் மற்றும் சாலையில் செல்கிறது. போர்வெல் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்குகள் சேதமடைந்துள்ளன.


கரூர் நகராட்சியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், தண்ணீர் திறக்கப்படும் போது குடிநீர் வீணாகிறது. குறிப்பாக, ஆர்.டி.ஓ., சாலை, தின்னப்பா கார்னர், ராமகிருஷ்ணாபுரம், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ளிட்ட பல பகுதிகளில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. மேலும், 48 வார்டுகளில், 2011-16 வரை, 100 க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைத்து, மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் போர்வெல் குழாய் சேதமடைந்துள்ளது. சின்டெக்ஸ் தொட்டி உடைந்தும், திருடு போயும் உள்ளது. பல இடங்களில் மின் மோட்டார்களை கூட காணவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போர்வெல்களை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும். மேலும், உடைந்த குடிநீர் குழாய்களையும் சரி செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X