சாலையில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Added : நவ 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இதனால் லாரிகள் மூலம், பிற மாவட்டங்களில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த லாரிகள், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சுக்காலியூர் ரவுண்டானா வந்து, மதுரை - சேலம், கரூர் - கோவை சாலைகள் வழியாக செல்கின்றன. மணல் சுமந்து செல்லும் லாரிகள், மூடாமல் செல்வதால் காற்று வீசும்போது, மணல்

கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இதனால் லாரிகள் மூலம், பிற மாவட்டங்களில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த லாரிகள், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சுக்காலியூர் ரவுண்டானா வந்து, மதுரை - சேலம், கரூர் - கோவை சாலைகள் வழியாக செல்கின்றன. மணல் சுமந்து செல்லும் லாரிகள், மூடாமல் செல்வதால் காற்று வீசும்போது, மணல் துகள் பறந்து சாலையில் தடுப்புச் சுவரோரத்தில் குவிகிறது. அதனால், இரண்டு சக்கர வாகனங்களில் நிலை தடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. அவ்வப்போது நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தொடர்ந்து மணல் சேர்ந்து கொள்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X