பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் தீ மிதிவிழா

Added : நவ 04, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிவிழா நடந்தது. ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, மூன்று நாட்களாக கோவில் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று காலை தீ மிதி விழா நடந்தது. ஊரடங்கு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிவிழா நடந்தது. ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, மூன்று நாட்களாக கோவில் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று காலை தீ மிதி விழா நடந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குட்பட்டு விழாவை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், கோவில் எதிரே உள்ள தீக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் கோவில் பூசாரிகள் கலசத்துடன் தீ மிதித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை தேர் திருவிழா நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X