பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.32 லட்சம் மதிப்பு 160 மொபைல் போன் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

Added : நவ 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: தொலைந்து போன, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 160 மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் தொலைந்து போன மொபைல் போன்களை கண்டுபிடித்து தரவேண்டும் என, ஏராளமான புகார்கள் வந்தன. அதையடுத்து, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., செல்ல பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த,

நாமக்கல்: தொலைந்து போன, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 160 மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.


நாமக்கல் மாவட்டத்தில் தொலைந்து போன மொபைல் போன்களை கண்டுபிடித்து தரவேண்டும் என, ஏராளமான புகார்கள் வந்தன. அதையடுத்து, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., செல்ல பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த, செப்., 9ல், 301 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 160 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர், சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேற்று வழங்கினார். போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக, கொல்லிமலையில், அக்., 10 வரை, 80 உரிமமில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, 42 உரிமமில்லாத நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், லாரிகளில் கடத்தப்பட்ட, 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,050 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, உன்னியூரை சேர்ந்த டிரைவர் தமிழ்வாணன், 38, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 38 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X