பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவிலான வாள்சண்டை, நீச்சல் போட்டி: வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

Added : நவ 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வாள்சண்டை விளையாட்டு கழகம் சார்பில், வாள்சண்டை விளையாட்டு போட்டி, 21வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, 14வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று சாதனை படைத்தனர். சென்னையில் நடந்த, 20

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வாள்சண்டை விளையாட்டு கழகம் சார்பில், வாள்சண்டை விளையாட்டு போட்டி, 21வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, 14வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று சாதனை படைத்தனர். சென்னையில் நடந்த, 20 வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவியருக்கான வாள்சண்டை விளையாட்டு போட்டியில், நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவியர், 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களில், அரவிந்த வேலன், கவின், சாமிநாதன், ஜெயகீர்த்தனா, ஜெமிலியா, தேவதர்ஷினி ஆகியோர், ஹரியானாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடியில் நடந்த, 21வது மாநில அளவிலான நீச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அபிநந்த், அபூர்வா ஆகியோர், வெள்ளிப்பதக்கம் வெற்றனர். சென்னையில் நடந்த, 14வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 8-9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவி சாதனா ஸ்ரீ முதலிடம், 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மினி சப்-ஜூனியர், சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 16 வீரர்கள் பங்கேற்று, 21 பதக்கங்களை கைப்பற்றினர். அதில், சப்-ஜூனியர் பிரிவில் கலையரசி, ஜானியா நிதாஞ்சன் ஆகியோர், மஹாராஷ்டிராவில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், தாங்கள் பெற்ற பதக்கம், கேடயம், சான்றிதழை, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) சிவரஞ்சன், பயிற்சியாளர்கள் பிரபுகுமார், கோகிலா, புவனேஷ்வரி, ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X