மின்வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்

Added : நவ 04, 2021
Share
நாமக்கல்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் மின் பகிர்மான வட்டம் சார்பில், அந்தந்த கோட்ட அலுவலகங்களில் பொது மக்களை நேரடியாக சந்தித்து புகார்

நாமக்கல்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் மின் பகிர்மான வட்டம் சார்பில், அந்தந்த கோட்ட அலுவலகங்களில் பொது மக்களை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களில் பெரும் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நடக்கும். அந்த வகையில் வரும், 10ல் ப.வேலூர்; 17ல் திருச்செங்கோடு; 24ல் ராசிபுரம் என, அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகங்களில் மாலை 3:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடக்கிறது. மின்வினியோகம் சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X