பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தீபாவளி கொண்டாட்டம்: ஜவுளி, பட்டாசு வாங்க படையெடுப்பு

Added : நவ 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை (இன்று), கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதையடுத்து, நேற்று ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம், அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்தது.நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க, நாமக்கல்லுக்கு திரண்டு வந்ததால், கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில்,

நாமக்கல்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை (இன்று), கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதையடுத்து, நேற்று ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம், அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்தது.


நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க, நாமக்கல்லுக்கு திரண்டு வந்ததால், கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன் காரணமாக, அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அவற்றை கட்டுப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டனர். மேலும், திருடர்கள் நடமாட்டம் உள்ளதா எனவும், போலீசார் கண்காணிப்பு கேமரா மூலமும், தற்காலிக கோபுரம் அமைத்து, தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து, நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வரும் பணியாளர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள், தங்கள் ஊருக்கு செல்வதற்காக, பஸ் ஸ்டாண்டுக்கு படையெடுத்தனர். அதனால், பஸ் ஸ்டாண்டிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பதை காண முடிந்தது. நேற்று காலை சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X