பொது செய்தி

இந்தியா

10,000 மின் 'சார்ஜ்' நிலையம் அமைக்க ஐ.ஓ.சி., திட்டம்

Added : நவ 04, 2021
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுதும் மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்யும் 10 ஆயிரம் நிலையங்கள் அமைக்க ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பெட்ரோல் விலை உயர்வால் மின்சார வாகனங் களுக்கான தேவை பெருகி வருகிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.

புதுடில்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுதும் மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்யும் 10 ஆயிரம் நிலையங்கள் அமைக்க ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் மின்சார வாகனங் களுக்கான தேவை பெருகி வருகிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஐ.ஓ.சி. தலைவர் எஸ்.எம்.வைத்யா பேசியதாவது: மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம்.கர்நாடகா, டில்லி மாநிலங்கள் பொது போக்குவரத்தில் மின் வாகனங்களை சேர்த்துள்ளன. பெருகி வரும் மின் வாகனங்களுக்கான தேவையை கருதி அடுத்த 12 மாதங்களில் 2000 மின் சார்ஜ் நிலையங்களை அமைக்க உள்ளோம்.

அதற்கடுத்த இரு ஆண்டுகளில் 8000 நிலையங்கள் என 10 ஆயிரம் மின் சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்படும், என்றார்கடந்த வாரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின் சார்ஜ் நிலையங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X