சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் போதைக்கு தின்னர்; அடுத்தடுத்து மூவர் பலி

Added : நவ 04, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் போதைக்காக தின்னர் பயன்படுத்திய மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை பாப்பநாயக்கன் பாளையம், காய்க்கடை மைதானம் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல்,60. பார்த்திபன்,31. முருகானந்தம்,55. இவர்களில், பார்த்திபன், சக்திவேல் பெயிண்டர்களாகவம், முருகானந்தம் சமையல் தொழிலாளியாகவும்

கோவை:கோவையில் போதைக்காக தின்னர் பயன்படுத்திய மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம், காய்க்கடை மைதானம் அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல்,60. பார்த்திபன்,31. முருகானந்தம்,55. இவர்களில், பார்த்திபன், சக்திவேல் பெயிண்டர்களாகவம், முருகானந்தம் சமையல் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூவரும், தீபாவளியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் முதலே மது அருந்தியுள்ளனர்.

தொடர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக்திவேல் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென கீழே விழுந்து இறந்துள்ளார். இவரை தொடர்ந்து, பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார். அடுத்ததாக, பார்த்திபன் தனது வீட்டருகே இறந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கலப்பட மதுவை அருந்தியதன் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம், என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்துள்ளனர். இந்நிலையில், மூவர் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா கூறுகையில்,''முதற்கட்ட விசாரணையில், பெயிண்ட்டுக்கு கலக்கும் தின்னர் போன்ற பொருளை அவர்கள் போதைக்காக, பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அது எந்த மாதிரியான பொருள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X