நியூயார்க்:உலக வர்த்தகமைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar

நியூயார்க்:உலக வர்த்தகமைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (9)
Share
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சமீப காலமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் அதிபர் மாளிகைகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.



latest tamil news



உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சமீப காலமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் அதிபர் மாளிகைகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேலும்.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதற்கொண்டு அனைத்து அதிபர்களும் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளித்து அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.


latest tamil news



தற்போது நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டு உள்ளது.அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X