கொரோனாவுக்கு மாத்திரை வந்தாச்சு!

Added : நவ 04, 2021
Share
Advertisement
லண்டன்: உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.கொரோனாவை தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் இதுவரை எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும்

லண்டன்: உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவை தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் இதுவரை எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் 'மால்னுபிரவிர்' மாத்திரையை தயாரித்துள்ளதாகவும், அதன் தரவு, ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.,) சமர்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்தது.

தற்போது அவசரகால பயன்பாட்டுக்கு இம்மாத்திரையை பயன்படுத்த பிரிட்டனின் மருந்து, சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.எச்.ஆர்.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார துறை செயலர் சஜித் கூறுகையில், 'இது பிரிட்டனுக்கு வரலாற்றில் முக்கியமான நாள். உலகின் முதல் நாடாக கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X