திருநங்கைகளை பெருமையாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி!

Added : நவ 04, 2021
Share
Advertisement
மதுரை: ''திருநங்கைகளை பெருமையாக நடத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளதென'' மதுரை திருநங்கை ஆவண மைய இயக்குனர் ப்ரியாபாபு தெரிவித்தார்.தமிழக திருநங்கைகள் குறித்து அவர் கூறியது: தமிழகத்தில் 2011 தேசிய கணக்கெடுப்பின் படி 23ஆயிரம் திருநங்கை, திருநம்பிகள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 2 அல்லது 3 மடங்கு ஆகியிருக்கலாம். மதுரையில் திருநங்கைகளுக்கான நுாலகத்தை

மதுரை: ''திருநங்கைகளை பெருமையாக நடத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளதென'' மதுரை திருநங்கை ஆவண மைய இயக்குனர் ப்ரியாபாபு தெரிவித்தார்.

தமிழக திருநங்கைகள் குறித்து அவர் கூறியது: தமிழகத்தில் 2011 தேசிய கணக்கெடுப்பின் படி 23ஆயிரம் திருநங்கை, திருநம்பிகள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 2 அல்லது 3 மடங்கு ஆகியிருக்கலாம். மதுரையில் திருநங்கைகளுக்கான நுாலகத்தை அமைத்துள்ளேன். 200க்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணங்கள் சேகரித்து வைத்துள்ளோம். கல்லுாரி மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கிறோம்.

கடந்த நவம்பரில் இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான ஆன்லைன் வார இதழை தமிழ், ஆங்கிலத்தில் தொடங்கினோம். மதுரையில் டிரான்ஸ் கிச்சன் மூலம் உணவு சமைக்கும் பணியையும் செய்கிறோம். நவ. 13ல் திருநங்கைகளுக்கான முதல் பதிப்பகத்தை இந்தியளவில் உருவாக்கி வெளியிட போகிறோம்.2008ல் திருநங்கைகளுக்கான நலவாரியம் தமிழகத்தில் அமைக்கப்பட்டது. திருநங்கை என்ற சொல்லாடல் வந்த பின் எங்கள் மீதான மக்கள் பார்வை மாறி வருகிறது.

பத்தாண்டுகளை கடந்த நிலையில் எத்தனையோ பேர் தமிழக அரசு, தனியார் துறைகளில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற புரிதல் இல்லை.மகளிர் இலவச பஸ்களில் நாங்களும் இலவச பயணம் செய்கிறோம். இலவச கல்வி உதவித் தொகை கிடைக்கிறது. அரசின் அனைத்து விண்ணப்பங்களிலும் திருநங்கை/ திருநம்பி என்று குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம் தேடிவரும் கல்வித் தன்னார்வலர் திட்டத்தில் கூட இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் வேறு மாநிலத்தில் இல்லாதது.

இன்னும் ஐந்தாண்டுகளில் ஆண், பெண் சமம் என்பதை போல முப்பாலினமும் சமம் எனும் பொதுச்சூழல் உருவாகும்.சமுதாயத்தில் எங்களை மறுப்பது வேறு; வீட்டினில் மறுப்பது வேறு. வீடு சரியாக இருந்தால் சமுதாயத்தில் நாங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. என்னதான் புரிதல் ஏற்பட்டாலும் இன்னமும் திருநங்கை, திருநம்பியாக மாறும் மகன், மகளை வீட்டை விட்டு துரத்தும் சம்பவம் நடக்கிறது.

பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை திருநங்கையாய் மாறிய ஒரே காரணத்திற்காக வெளியே சென்று படிக்க முடியாமல் சோற்றுக்கும் இருப்பிடத்திற்கும் யாரிடமும் கையேந்துவதா என ஒவ்வொரு பெற்றோரும் நினைத்து பார்க்கவேண்டும். வீடு தான் பாதுகாப்பான கூடு என்பதை பெற்றோர் உணர்ந்தால் திருநங்கைகளும் கல்வியில் சிறந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்.வீடும் சமுதாயமும் அரவணைப்பதை தவிர வேறென்ன எங்களுக்கு வேண்டும் என்றார். தொடர்புக்கு: 96005 55097.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X