கின்னாரம் இசைக்கருவியுடன் கோவலன் கதை: அசத்தும் அருணாச்சலம்

Added : நவ 04, 2021
Share
Advertisement
இப்போதெல்லாம் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் கிராமங்களில் கூட இல்லை. குழந்தைகள் கதை கேட்க தயாராகதான் உள்ளனர். ஆனால் கதை சொல்லத்தான் யாரும் இல்லை. ஆயினும் 63 வயதிலும் கணீர் குரலால் கதைப்பாடல் பாடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரும்பி பார்க்க வைக்கிறார் திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் அருகே நந்தவனத்தை சேர்ந்த அருணாச்சலம்.தெளிவான
கின்னாரம் இசைக்கருவியுடன் கோவலன் கதை: அசத்தும் அருணாச்சலம்

இப்போதெல்லாம் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் கிராமங்களில் கூட இல்லை. குழந்தைகள் கதை கேட்க தயாராகதான் உள்ளனர். ஆனால் கதை சொல்லத்தான் யாரும் இல்லை. ஆயினும் 63 வயதிலும் கணீர் குரலால் கதைப்பாடல் பாடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரும்பி பார்க்க வைக்கிறார் திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் அருகே நந்தவனத்தை சேர்ந்த அருணாச்சலம்.

தெளிவான உச்சரிப்புடன் கின்னாரம் என்ற இசைக்கருவியை இசைத்தபடி பாடல் மூலம் 'கோவலன் கண்ணகி' கதையை கூறி அசத்தி வருகிறார். கின்னாரம் வாசித்தபடி ஊர் ஊராக 'நடைராஜாவாக' சென்று கதை சொல்கிறார். கின்னாரம் என்பது பழந்தமிழரின் இசைக்கருவி. தற்போது தமிழகத்தில் இவரிடம் மட்டுமே இந்த இசைக்கருவி உள்ளது. இதை சாதாரணமாக உருவாக்க முடியாது. அதற்கு தேவையான கின்னார சுரைக்காய் எங்கேயும் இல்லை. இந்த சுரைக்காயில் மூங்கிலை சொருகி, நரம்பு சேர்த்து இசைக்கருவியை உருவாக்குகின்றனர். பழந்தமிழர் கலையான கதைப்பாடல், கின்னாரம் இசை அழியாமல் பாதுகாக்க, டிஜிட்டல் யுகத்தோடு போட்டி போட்டு வரும் இவருக்கு அரசு உதவினால் இக்கலை உயிர்ப்புடன் இருக்கும்.

இவரிடம் பேசிய போது 'கதை சொல்லட்டா தம்பி' என்று ஆரம்பித்தார்.''பதினான்கு வயது முதல் கின்னாரம் இசைத்து கதை சொல்லி வருகிறேன். அதிகாலை 5:00 மணிக்கு கிளம்பினால் மாலை 5:00 மணிக்குதான் வீடு திரும்புவேன். குறைந்தது 3 மணிநேரம் முதல் தொடர்ந்து 2 நாட்களானாலும் கதை, பாட்டு என சொல்வேன். வீணை, வயலினுக்கு முன்னோடி இந்த கின்னாரம்தான். எனது தாத்தா, அப்பாவிடம் கற்றுக் கொண்டதுதான் 'கோவலன் கண்ணகி' கதை. ஊர் ஊராக சென்று கதை சொல்லும் போது ரூ.50, சில நாட்கள் ரூ.500 கிடைக்கும். அதை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். எனக்கு வேறு தொழில் தெரியாது.எனக்கு ஒரே மகள். அவருக்கு திருமணமாகிவிட்டது. எனக்கு பின் இதை தொடர யாரும் இல்லை.

கின்னாரம் சுரைக்காயும், இந்த இசைக்கருவியும் இப்போது வேறெங்கும் இல்லை. இன்னொரு கருவி செய்ய கின்னாரம் சுரைக்காய் விதைகளை பாதுகாத்து வருகிறேன். அதை விதைத்து சுரைக்காயை உருவாக்க போதுமான இடவசதி என்னிடம் இல்லை. இதை நடவு செய்தால் ஆறுமாதங்களுக்குப் பின் சுரைக்காய் கிடைக்கும். இந்த சுரைக்காய் காய்த்து, பழமாகி உலர்ந்து விழும் வரை பறிக்க கூடாது. பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் இருந்த 2 கின்னாரம் கருவிகள்தான் இப்போதும் உள்ளன. இக்கலையை அரசிடம் தெரிவித்து பணஉதவி பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் ஏமாற்றி விட்டனர். பாரம்பரிய இசை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சவுண்ட் மணி என்பவர், இக்கருவி பற்றி ஆவணப்படம் எடுத்துள்ளார். இந்தப் பழங்கால இசைக்கருவியை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X