குழாய் பதித்த இடத்தில் குழி தவறி விழுந்த வாலிபர் பலி

Added : நவ 04, 2021 | |
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-அன்னுார் சாலையில், குடிநீர் குழாய் பதித்த இடத்தில் ஏற்பட்ட குழியில் விழுந்த வாலிபர் இறந்தார்.குன்னுார், கரும்பாலம் காந்திநகரைச் சேர்ந்தவர் யோகராஜ். இவரது இளைய மகன் திவாகரன் 24. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தீபாவளி பண்டிகையை கொண்டாட, சூலுாரில் உள்ள தனது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-அன்னுார் சாலையில், குடிநீர் குழாய் பதித்த இடத்தில் ஏற்பட்ட குழியில் விழுந்த வாலிபர் இறந்தார்.குன்னுார், கரும்பாலம் காந்திநகரைச் சேர்ந்தவர் யோகராஜ். இவரது இளைய மகன் திவாகரன் 24. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தீபாவளி பண்டிகையை கொண்டாட, சூலுாரில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அன்னுார் சாலையில் பொகளூர் அருகே சென்றபோது, சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதித்த பின்பும், மீண்டும் ஏற்பட்ட குழியில் நிலை தடுமாறி விழுந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சிறுமுகை போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X