நக்சல் தடுப்பு போலீசார் நீலகிரியில் கண்காணிப்பு

Added : நவ 04, 2021
Advertisement
கூடலுார்:தமிழக - கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நக்சல் வேல்முருகனை கடந்த ஆண்டு நவ., 3ல் தமிழக - கேரள எல்லையில் உள்ள, வயநாடு வனப் பகுதியில் கேரள போலீசார் சுட்டு கொன்றனர்.அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரள பகுதியில் நக்சல் தாக்குதல்
 நக்சல் தடுப்பு போலீசார் நீலகிரியில் கண்காணிப்பு

கூடலுார்:தமிழக - கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நக்சல் வேல்முருகனை கடந்த ஆண்டு நவ., 3ல் தமிழக - கேரள எல்லையில் உள்ள, வயநாடு வனப் பகுதியில் கேரள போலீசார் சுட்டு கொன்றனர்.அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரள பகுதியில் நக்சல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியானதால், நேற்று முன்தினம் இரவு முதல் கேரள போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக - கேரள எல்லையில் உள்ள நாடுகாணி உள்ளிட்ட சோதனை சாவடிகளில், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர். அவர்களுடன், உள்ளூர் போலீசாரும் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X