கருமத்தம்பட்டி: திருடனை பிடிக்க உதவிய தம்பதியை பாராட்டி டி.ஐ.ஜி., முத்துசாமி பரிசுகள் வழங்கினார்.கடந்த, 1ம் தேதி இரவு, சோமனூர் அடுத்த செந்தில் நகரை சேர்ந்த நிர்மலா, 40 என்பவரது வீட்டுக்குள், இரு மர்ம நபர்கள் நுழைந்து, வெள்ளி பொருட்கள், லேப்டாப் திருடிக்கொண்டு தப்பமுயன்றனர்.
சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜ், கோமதி தம்பதி, அருகில் உள்ளவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.வீட்டின் முன் திரண்ட பொதுமக்கள், திருடர்களை துரத்தியதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார்; மற்றொருவர் தப்பினார். பிடிபட்ட நபர், கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்நபர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் முனீஸ்வரன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பிய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், திருடனை பிடிக்க உதவிய நாகராஜ் வீட்டுக்கு வந்த, மேற்கு மண்டல டி.ஐ.ஜி., முத்துசாமி, தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து, பட்டாசு, பழங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement