பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

Added : நவ 04, 2021
Share
மதுரை: 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச்சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றியதாக முதல்வர் கூறி வருவது மகிழ்ச்சி. அதுபோல அரசு ஊழியர்களின் நீண்டகால

மதுரை: 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றியதாக முதல்வர் கூறி வருவது மகிழ்ச்சி. அதுபோல அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கெடுத்த அப்போதைய எதிர்கட்சி தலைவரான தற்போதைய முதல்வர், ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்துசெய்யப்பட்டு, பழைய திட்டம் கொண்டு வரப்படும்,'' என்றார்.

அதை நிறைவேற்ற வேண்டும். மேலும் மத்திய அரசு வழங்கியது போல மாநில அரசு ஊழியர்களுக்கும் 14 சதவீத அகவிலைப்படி உயர்வு, நாலரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.தீபாவளியையொட்டி நவ.,4 முதல் 7 வரை அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நவ., 6 கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனால் சுகாதார ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் உள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X