சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் இளம்பெண் கொலை: காதலன் கைது

Added : நவ 04, 2021
Share
Advertisement
கோவையில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அஸ்வதி,21; பி.காம்., பட்டதாரி. இவர், தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பெண்ணின் கணவர் ஜெகனுடன், 29, அஸ்வதி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக

கோவையில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அஸ்வதி,21; பி.காம்., பட்டதாரி. இவர், தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பெண்ணின் கணவர் ஜெகனுடன், 29, அஸ்வதி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்து அந்த நபரை, மனைவி பிரிந்து சென்றார்.

இந்நிலையில், அஸ்வதி நேற்று அவரது வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்தார். அவரது கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. சாய்பாபா காலனி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், காதல் விவகாரத்தில், அஸ்வதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த, ஜெகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X