சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு வெடிகள் வெடித்து ஸ்கூட்டரில் சென்ற தந்தை, மகன் பலி

Added : நவ 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மரக்காணம்:புதுச்சேரி அருகே, தமிழக எல்லையில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் ஸ்கூட்டரில் சென்ற தந்தையும், மகனும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுச்சேரி, வீராம்பட்டிணம் காக்காயந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன், 34. நாட்டு வெடிகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ரூபனா. மகன் பிரதீஷ், 8. அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து
 நாட்டு வெடிகள் வெடித்து ஸ்கூட்டரில் சென்ற தந்தை, மகன் பலி

மரக்காணம்:புதுச்சேரி அருகே, தமிழக எல்லையில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் ஸ்கூட்டரில் சென்ற தந்தையும், மகனும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுச்சேரி, வீராம்பட்டிணம் காக்காயந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன், 34. நாட்டு வெடிகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ரூபனா. மகன் பிரதீஷ், 8. அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.இருவரும் நேற்று காலை, வீராம்பட்டிணத்தில் இருந்து, ஸ்கூட்டரில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, மரக்காணம் அடுத்த கூனிமேட்டிற்கு சென்றனர். அங்கு பட்டாசுகளை விற்ற பின், மீதியுள்ள பட்டாசு மூட்டைகளுடன், புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இ.சி.ஆரில், சின்னக் கோட்டக்குப்பம் அருகே மதியம் 1:40 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென, கறிக்கடை சந்தில் இருந்து கோட்டக்குப்பம் ஜமீத் நகரைச் சேர்ந்த சகாபுதீன், 54, ஸ்கூட்டரில் சாலையை குறுக்கே கடக்க முயன்றார். இதை கண்டதும் திடீரென பிரேக் பிடித்த கலைநேசன், ஸ்கூட்டருடன் நிலை தடுமாறி விழுந்தார்.

அப்போது, உராய்வு ஏற்பட்டு ஸ்கூட்டரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் பலத்த சத்தத்துடன், அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த கோர வெடி விபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவனின் உடல் 100 மீட்டர் துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டு, புதுச்சேரி எல்லையில் விழுந்தது.
உடல் பாகங்கள், ஸ்கூட்டரின் பாகங்கள் இ.சி.ஆரில் 100 மீட்டர் சுற்றளவிற்கு சிதறின. விபத்து நடந்த இடத்தில் நின்றிருந்த ஒரு லாரியின் கண்ணாடி, ஐந்து வணிக வளாகங்களின் கண்ணாடிகள், மூன்று வீடுகளில் சிமென்ட் ஷீட்கள் உடைந்து நொறுங்கின.இந்த விபத்தில், ஸ்கூட்டரில் வந்த சகாபுதீன் பலத்த காயமடைந்து, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக, இ.சி.ஆரில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தமிழக பகுதியில் தடைதமிழக பகுதியில் நாட்டு வெடிகள் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் கூட மரக்காணத்தில் இருவரை கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரியாங்குப்பம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருப்பினும், புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகளை தயாரித்து, தமிழக பகுதியில் திருட்டுத் தனமாக விற்கின்றனர். கோட்டக்குப்பம் பகுதியில் செக் போஸ்ட் அமைத்து, வாகன தணிக்கை செய்திருந்தால் இப்படி ஒரு விபத்து நடந்திருக்காது.


ஆபத்தான நாட்டு வெடி

பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறும் அரியாங்குப்பம் பட்டாசுக்கு தமிழக பகுதியில் தனி வரவேற்பு உண்டு. இதில் நான்கு, ஐந்து பட்டாசுகளை ஒன்றிணைத்தால் ஒரு ஆளை கொல்லும் அளவிற்கு வெடி குண்டுகளை தயார் செய்து விடலாம். ஒவ்வொரு பட்டாசிலும் மருந்து அளவு, டெசிபல் பற்றி ஏதும் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மருந்துகளை திணிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த வகை பட்டாசுகள், சிவகாசி பட்டாசுகளை பின்னுக்கு தள்ளிவிடுகின்றன.

இப்படி தயாரித்த ஆபத்தான நாட்டு பட்டாசு வெடித்துதான், தந்தையும், மகனும் உயிரிழந்து உள்ளனர்.விபத்து நடந்தது எப்படிகறிக்கடை சந்தில் இருந்து, சகாபுதீன் ஸ்கூட்டரில் திடீரென குறுக்கே வர, கலைநேசன் சடன் பிரேக் அடித்துள்ளார். அப்போது ஸ்கூட்டரில் நிலை தடுமாறி விழுந்ததில் பட்டாசுகள் சாலையில் உராய்ந்தும், அழுத்தம் அதிகரித்தும், வெடித்து சிதறி உள்ளன.

அத்துடன் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கும் வெடித்து சிதறியது.அதனால் விபத்து நடந்த இடம், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல போர்க்களமாக காட்சியளித்தது.30 வீடுகளில் சிதறிய உடல் பாகங்கள்விபத்தில் சிக்கிய இரண்டு பேருடைய உடல்களில் இடுப்பு பகுதிக்கு கீழ் முற்றிலும் சிதறிவிட்டது. 25 மீட்டர் துாரம் வரை 30க்கும் மேற்பட்ட வீடுகளின் மீது உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. கோட்டக்குப்பம் போலீசார், வீடுகளின் மேல் ஏறி, அவற்றை பாலிதீன் பைகளில் சேகரித்தனர்.

சிறுவன் பிரதீஷ் இடுப்பு பகுதி, வெடி விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் உயரம் துாக்கி வீசப்பட்டு, அருகில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மோதி, கீழே விழுந்து கிடந்தது. இதேபோல், கலைநேசனின் ஒரு கால், 15 மீட்டர் தொலைவில் தனியார் தோட்டத்தின் உள்ளே விழுந்து கிடந்தது.


கண்டறிந்தது எப்படி

வெடி விபத்தில் உடல்கள் சிதறியதால் இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. புதுச்சேரி போலீசாருடன் தமிழக போலீசார் ஆலோசனை நடத்தி, இறந்தவர்களை அடையாளம் கண்டனர். முதலில், நாட்டு வெடிகுண்டு வெடித்து தந்தை, மகன் உயிரிழந்ததாக தகவல் பரவியது.சம்பவ இடத்தில் நாட்டு வெடிகளில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் சிதறி கிடந்ததை பார்த்து, நாட்டு வெடிகள் மூலம் விபத்து நடந்ததை போலீசார் உறுதி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உண்மையை சொல் - Pondicherry,இந்தியா
06-நவ-202108:48:58 IST Report Abuse
உண்மையை சொல் , கலைநேசன் திடீரென பிரேக் பிடித்க வில்லை, அவர் கீழயேயும் விழவில்லை. அது வீடியோ பார்த்த அனைவருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
05-நவ-202112:24:27 IST Report Abuse
தமிழ்வேள் சகல சந்துகள் , மெயின் சாலை சந்திப்புகளில் ஸ்பீடு பிரேக்கர்கள் அவசியம் தேவை ....ஸ்பீடு பிரேக்கர்களை உடைப்பவர்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும் ...மித வேகம் மிக நன்று ..மார்க்கம் என்றுமே குறுக்கு சால் ஓட்டும் ..வாழ்க்கையிலும் , சாலையிலும் ....
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
05-நவ-202108:02:24 IST Report Abuse
Ravichandran Narayanaswamy இந்த வண்டியை இடைமறித்த அந்த நல்லவருக்கு கடும் தண்டனை கொடுங்கள். அவர்கள் லைசென்ஸை பிடுங்குங்கள். சாலைகளில் சந்திலிருந்து வருபவர்கள் நின்று வரவேண்டும் என்று சொல்லுங்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-நவ-202121:35:20 IST Report Abuse
NicoleThomsonவேதனை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X