குடிபோதையில் கத்திக்குத்துபொங்கலுார், காட்டூரை சேர்ந்தவர் கோபி, 50. அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 50. குடிபோதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சிவகுமார், கோபியை கத்தியால் குத்தி விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கோபியை மீட்டனர். அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய சிவகுமாரை காமநாயக்கன்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
வாகனம் மோதி ஒருவர் பலிதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் விக்னேஸ்வரன், 26. பொங்கலுார் அருகிலுள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது டூ வீலரில் தனது உறவினர் வீட்டுக்கு பொங்கலுார் சென்றார். ஐயப்பா நகர் செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கில் வாலிபர் தற்கொலைபொங்கலுார் அருகே பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் கோபாலகிருஷ்ணன், 20. தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சரியாக வேலைக்கு செல்லாததால் அவரது தாய் திட்டியுள்ளார். போதை பழக்கத்தை விட முடியாததாலும், தாய் திட்டியதாலும் மனமுடைந்த, கோபாலகிருஷ்ணன், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் முதியவர் பலிதிருப்பூர், காங்கயம் ரோடு அருகேயுள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், 60. தொழிலாளி. இவர் காங்கயம் ரோடு, ஹவுசிங் யூனிட் பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த கார் மோதியதில், அவர் உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.பைக்கில் சென்றவர் பலிகேரளா, மூணாறு, பள்ளிவாசல் எஸ்டேட்டில் பணிபுரியும் ராஜன் மகன் மதன்குமார், 28. தனது பைக்கில் கரூர் நோக்கி சென்ற போது குருக்கத்தி கிராமம் அருகில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து பலியானார். அவரின் மனைவி சுபஸ்ரீ, 24, வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE