கட்சியை பலப்படுத்த பணம் தேவை : கேட்கிறார் தேவகவுடா

Updated : நவ 06, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
பெங்களூரு : ''கட்சியை பலப்படுத்த வேண்டுமானால் பொருளாதார சக்தி முக்கியம். பா.ஜ., மற்றும் காங்கிரசிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை கூற மாட்டேன். மாநில கட்சியான ம.ஜ.த.,வை காப்பாற்ற வேண்டும்," என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.பெங்களூரு சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் அவர் நேற்று கூறியதாவது:எங்கள் கட்சிக்கு பொருளாதார உதவி தேவை. இதன் பொறுப்பை அனைவரும் ஏற்க
'கட்சி,பலப்படுத்த பணம் தேவை, தேவகவுடா

பெங்களூரு : ''கட்சியை பலப்படுத்த வேண்டுமானால் பொருளாதார சக்தி முக்கியம். பா.ஜ., மற்றும் காங்கிரசிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை கூற மாட்டேன்.

மாநில கட்சியான ம.ஜ.த.,வை காப்பாற்ற வேண்டும்," என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.பெங்களூரு சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் அவர் நேற்று கூறியதாவது:எங்கள் கட்சிக்கு பொருளாதார உதவி தேவை. இதன் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும்.'பஞ்சரத்னா' என்ற திட்டத்தின் பெயரில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களை வரவழைத்து, கருத்து கேட்டறிந்தோம்.

எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டுமானால் பொருளாதார சக்தி முக்கியம். பா.ஜ., மற்றும் காங்கிரசிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மீண்டும் கூற மாட்டேன்.மாநில கட்சியான ம.ஜ.த.,வை காப்பாற்ற வேண்டும். கட்சியை பலப்படுத்த பணம் புரட்டுவது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்கு தெரியும்.


இடைத்தேர்தலில், அனைவரும் உழைத்தனர். 2023ன் தேர்தல் நேரத்தில், அனைவரும் பணியாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரும் 8 முதல், இரண்டாம் கட்ட கருத்தரங்கு நடக்கும்.
இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து நான் பேசவில்லை. தோல்வியை ஏற்று கொண்டோம்.மாநில கட்சியை காப்பாற்றுவோம். 2023ன் தேர்தல் வரை, நான் 'ஆக்டிவ்' ஆக இருப்பேன். முன்னாள் முதல்வர் குமாரசாமி, திப்பேசாமி உட்பட கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-நவ-202103:15:58 IST Report Abuse
meenakshisundaram பிரதமராகாவே இருந்ததாச்சு -மேலும் எந்த பிரதமரும் செய்யாத சாதனையை செஞ்சாச்சு -சபை நடக்கையில் தூக்கம்? இன்னும் இன்னா ஆசை ?இருக்குற காசு ,நேரத்துலே 'நாஷ்டா' ஊட்டா சாப்பிட்டிட்டு தூங்குங்க ஐயா
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
05-நவ-202123:19:49 IST Report Abuse
Mohan பாவம், PM ஆக இருந்தவருக்கு என்ன பணக் கஷ்டமோ.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
05-நவ-202122:09:17 IST Report Abuse
s t rajan கொஞ்சம் சொந்தக் காசை செலவு பண்ணுங்க சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X