டீசல் மீதான வரி குறைப்பு; லாரி உரிமையாளர் நிம்மதி

Added : நவ 05, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்: டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஒரு மாதமாக உயர்ந்து வந்தது. இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 106 மற்றும் டீசல் 103 ரூபாயாகவும் உயர்ந்தது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவானது.நேற்று முன்தினம், பெட்ரோல் மீதான கலால் வரியில்,
diesel,fuel,lorry,டீசல்

திருப்பூர்: டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஒரு மாதமாக உயர்ந்து வந்தது. இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 106 மற்றும் டீசல் 103 ரூபாயாகவும் உயர்ந்தது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவானது.

நேற்று முன்தினம், பெட்ரோல் மீதான கலால் வரியில், ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்து பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், பெட்ரோல் விலை, 101 ரூபாயாகவும், டீசல் விலை, 93 ரூபாயாகவும் குறைந்துள்ளது.


latest tamil news



திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி கூறுகையில், ''கலால் வரி குறைக்கப்பட்டதால், தற்காலிகமாக டீசல் விலை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் டீசல் விலை கொண்டு வந்து விட்டால், ஒரு லிட்டர் டீசல், 50 ரூபாய்க்கு கீழ் சென்று விடும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-நவ-202108:12:28 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அது எப்போது உங்கள் சரக்கு கட்டணங்கள் குறையும். டீசல் ஐ காட்டி எற்றினீர்களே.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-நவ-202106:50:29 IST Report Abuse
Kasimani Baskaran மத்திய அரசு கலால் வரியின் விகிதாச்சாரத்தை குறைத்தற்கு இணையாக ஒரு சில மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு எரிபொருள் மீது போடும் வரியையும் குறைத்துள்ளார்கள். இது பெட்ரோல் நுகர்வோர்களுக்கு 10% குறைவான விலையில் கிடைக்கும். போக்குவரத்துச்செலவு மற்றும் பொருள்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல ஆகும் செலவும் குறையும். தமிழகம் போன்ற மாநிலங்கள் எரிபொருள்களை ஜிஎஸ்டி க்குள் கொண்டுவர எதிர்ப்புத்தெரிவிப்பது மட்டுமல்லாமல் - மாநில அரசின் வரியையும் குறைக்காமல் ஆட்டம் போடுகிறார்கள். குறைந்தபட்சம் அதிகரிக்காமலாவது இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X