ஆர்யன் கான் வழக்கில் திருப்பம்: சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம்

Updated : நவ 05, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி : ஆர்யன்கான் வழக்கில் திடீர் திருப்பமாக , சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23 உள்ளிட்ட சிலரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு
 Aryan Khan Case Officer Sameer Wankhede Removed From Drugs-On-Cruise Probe

புதுடில்லி : ஆர்யன்கான் வழக்கில் திடீர் திருப்பமாக , சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23 உள்ளிட்ட சிலரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil news
ரூ. 25 கோடி பேரம்இந்த வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவுக்கு கொடுக்க பேரம் நடந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது குறித்து, என்.சி.பி.,யின் வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் கியானேஷ்வர் சிங் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு விசாரித்தது.

இதையடுத்து சமீர் வான்கடே டில்லி என்.சி.பி., தலைமையகத்தில் கடந்த 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.


டில்லிக்கு இடமாற்றம்


இந்நிலையில் இன்று (நவ.05) ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்த சமீர் வான்கடே அதிரடியாக விடுவிக்கப்பட்டார். டில்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள என்.சி.பி., தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், சமீர் வான்கடேவுக்கு பதிலாக சஞ்சய் சிங் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
06-நவ-202112:33:42 IST Report Abuse
raja அவ்வளவுதான்... நம்ப போன் மாணிக்கவேல் சார் கேசு மாதிரியேதான்... இப்போ சிலை கடத்தல் பற்றிய செய்தியே வருவதில்லை... அதுபோலத்தான் இனிமே இந்த போதை.. முக்கியமா ஆரியன்ஹான் கேசு பற்றிய செய்தியே வராது....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-நவ-202104:36:05 IST Report Abuse
meenakshisundaram இப்பத்தான் வழக்கு விசாரணை 'சரியான 'வழியில் செல்கிறது -அப்படீன்னு சம்பந்தப்பட்டவனுங்க சொல்லுவாங்க
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-நவ-202123:14:15 IST Report Abuse
Natarajan Ramanathan எதற்கு சஞ்சய் சிங் என்ற புதிய அதிகாரி? ஷாரூக்கானையே விசாரணை அதிகாரியாக நியமித்துவிடலாமே
Rate this:
soundararajan Ramaswamy - Chennai,இந்தியா
06-நவ-202113:47:28 IST Report Abuse
soundararajan Ramaswamyமிக சரியாக சொன்neeர்கள் . ஷாருக்கானும் பாகிஸ்தான் செல்ல தயாராகிவிட்டார் என்று கேள்வி. ஏனென்றால் இந்தியாவில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X