சைக்கிள், சந்திரமோகன் ரத்தத்தில் ஊறியது.

Updated : நவ 05, 2021 | Added : நவ 05, 2021
Share
Advertisement
ஆரோக்கியத்தின் திறவு கோல் சைக்கிள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் உறுதியும் கொண்ட தொழிலதிபர் சந்திரமோகன் சைக்களின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக எவ்வளவோ வசதியும் வாய்ப்பும் இருந்தும் இப்போதும் வீட்டில் இருந்து தனது தொழிலகத்திற்கு சைக்கிளில்தான் வருகிறார் தன்னை சந்திக்க வருபவர்களை சைக்கிள் வாங்கி ஒட்டுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.ஏ.சந்திரமோகன்,



latest tamil news


ஆரோக்கியத்தின் திறவு கோல் சைக்கிள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் உறுதியும் கொண்ட தொழிலதிபர் சந்திரமோகன் சைக்களின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக எவ்வளவோ வசதியும் வாய்ப்பும் இருந்தும் இப்போதும் வீட்டில் இருந்து தனது தொழிலகத்திற்கு சைக்கிளில்தான் வருகிறார் தன்னை சந்திக்க வருபவர்களை சைக்கிள் வாங்கி ஒட்டுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.
ஏ.சந்திரமோகன், மதுரைக்காரர்.
இளம் வயதில் பட்டப்படிப்பு படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சைக்கிள் கடை ஒன்றில் வேலை பார்த்தார்.
அந்த சைக்கிள் கடையில் என்ன என்ன பொருட்கள் இருக்கிறது அதன் செயல்பாடுகள் என்ன என்பதை கடை முதலாளியை விட அதிகம் கற்றுத் தேர்ந்தார் காரணம் சைக்கிள் மீதான அபரிமிதமான காதல்.


latest tamil news


இதன் காரணமாக வீட்டிற்கு சந்திரமோகன் சாப்பிட போகவேண்டும் என்று சொன்னால், அந்த ஒரு மணி நேர இடைவெளியில் முக்கிய கஸ்டமர்கள் வந்தால் சமாளிக்க முடியாது போகுமோ? என்பதற்காக நாலாணா கொடுத்து பக்கத்திலேயே பத்து நிமிடத்தில் சாப்பிட்டு வரும்படி சொல்வார் முதலாளி,நாலாணாவிற்கு நான்கு பரோட்டா கிடைத்த காலமது.
சிறிது காலம் அங்கு இருந்தவர் பின்னர் சொந்தமாக தொழில் துவங்க முடிவு செய்தார் மில்லர் டைனமோ பல்ப் பியூசாகி விட்டால் கிடைப்பது சிரமம் இதை உணர்ந்தவர் அந்த பல்ப்பை தேடித்தேடி வாங்கி தமிழகம் மட்டுமல்லாது கேரளா வரை சென்று விற்றுவந்தார்.
இந்தக் கையில் முப்பது கிலோ எடையுள்ள பேக், அந்தக் கையில் முப்பது கிலோ பேக் என்று அறுபது கிலோ பையுடன் பல ஆண்டுகள் பல ஊர்களில் பல கடைகளில் ஏறி இறங்கியிருக்கிறார், ரத்தத்தை வேர்வையாக மாற்றி உழைத்திருக்கிறார்.
அவரது அபார உழைப்பின் காரணமாக மதுரை தானப்பமுதலி தெருவில் ‛பொன் வேலன் சைக்கிள் மார்ட்' என்ற சைக்கிள் கடையை திறந்தார்.இவரது பேச்சும் மூச்சும் சைக்கிளாகவே இருந்தது வாடிக்கையாளராக இவரிடம் வருபவர்கள் சைக்கிள் வாங்கிக் கொண்டு போகும் போது நண்பர்களாக நாளடைவில் உறவினர்களாகவே மாறிவிடுவர் அந்த அளவிற்கு குண நலன் கொண்டவர்.
காலம் மாறியது வாடகை கடை சொந்தக் கடையானது கூடுதலாக அதே தெருவில் மேலும் இரண்டு கடைகளாக பெருகியது. மதுரையின் பெருமை மிக்க தொழிலதிபராக அடையாளம் காணப்பட்டார்.
இவரிடம் உள்ள இன்னோரு சிறப்பம்சம் மனிதாபிமானம் இவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் இவரை கொண்டாடுகின்றனர் விசேஷ நாட்களில் தனக்கு தன் வீட்டில் உள்ளோருக்கு என்ன வாங்குவாரோ அதேயேதான் ஊழியர்களுக்கும் வாங்கித் தருகிறார் வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ சுற்றுலா உண்டு.
யோக கலையில் நிபுணருமான இவர் பலருக்கு இலவசமாக யோகா கற்றுத்தருவதுடன் சைக்கிள் ஓட்டுவதும் ஒரு வித யோகாதான் என்பதையும் விளக்கமாக சொல்லி வருகிறார்,சைக்கிள் ரிக்சா ஒட்டுபவர்களுக்கு மாதம் மாதம் உதவித் தொகை செய்துவருகிறார்.
காலத்திற்கு ஏற்ப சைக்கிள், இப்போது கியர் சைக்கிள் மற்றும் மின்சாரத்தால் ஓடும் சைக்கிள் என்று புதிய வடிவத்தில் சைக்கிள்கள் நுாற்றுக்கணக்கில் வந்துவிட்டது அது அறிமுகமான வேகத்தில் இவரது கடைக்கு புதிய ரக சைக்கிளும் வந்துவிட்டது.உள்ளூர்,வெளியூர்,வெளிநாடு என்று எல்லா கம்பெனி சைக்கிள்களும் இவரது கடையில் அணிவகுத்து நிற்கின்றன உண்மையில் சொல்லப்போனால் இவருடையது சைக்கிள் கடை அல்ல சைக்கிள் கடல்.
இன்னும் இரண்டு வருடங்களில் நமது ரோடுகளில் இந்த மின்சார சைக்கிள்தான் ஆளப்போகிறது என்று அடித்துச் சொல்லும் அவர் அதன் சாதகங்களை சொல்லும் போது அவர் சொல்வது சரிதான் என்று மனது ஏற்றுக் கொள்கிறது.
இவர் எட்டு அடி பாய்ந்தால் இவரது மகன் ஏ.சி.செந்தில் பதினாறு அடி பாய்கிறார்,வளரும் குழந்தைகளை வளரும் போது ஆரோக்கியமாக வளர்த்துவிட்டால் அதன் பிறகு ஆயுளுக்கும் கவலை இல்லை என்பதால் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் அசைவு தரும் சைக்கிளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக உலகில் உள்ள குழந்தைகளுக்கான அனைத்து விதமான சைக்கிள்களையும் கொண்டு வந்து குவித்திருக்கிறார்.ஒரு கண்காட்சி போல பார்த்துக் கொண்டே இருக்கலாம்,‛பொடுசுகளின் பொன்னுலகம்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சைக்கிள்கள் கண்களைக் கவரும் கண்காட்சியாக பரவசம் ஏற்படுத்துகிறது.மனதின் ஒரு ஒரத்தில் நமது குழந்தை பருவத்தில் இப்படி எல்லாம் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

இந்த சைக்கிள்களை வாங்குவதற்கு முன் ஓட்டி பார்ப்பதற்கு ஏற்ப நீண்ட பாதையை கடைக்கு உள்ளேயே வைத்து அசத்தியுள்ளார், எதுவும் வாங்கவிட்டாலும் பராவாயில்லை இலவசமாக இங்குள்ள டிராம்ப்போலின் என்பது போன்ற விளையாட்டு சாதனங்களில் இலவசமாக குதித்து விளயைாடி விதம் விதமான பொம்மைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழலாம் வாருங்கள் என்கிறார்.பணத்தை விட குழந்தைகளின் சந்தோஷத்தை மதிக்கும் அவரது குணம் அதில் தெரிகிறது.
அதிகரித்துவரும் பெட்ரோல் விலை, குறைந்து வரும் ஆரோக்கியம் இரண்டையும் சமாளிக்க ஒரே வழி சைக்கிள்தான் அதை நட்புடன் விற்பதை தொழிலாகக் கொண்ட சந்திரமோகன் (98424 34652) மற்றும் செந்தில் (99425 33559) இருவரிடம் பேசினால் சைக்கிள் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X