கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயம் ஆய்வு அறிக்கையில் அபாய சங்கு

Updated : நவ 07, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி:பருவநிலை மாற்றம் காரணமாக மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள கடற்கரை பகுதிகள் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை அடுத்து பருவநிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூஜ்ஜியம் அளவுஇதனால் மழைப் பொழிவு, வறட்சி, வெயில் மற்றும் பனி ஆகியவை
கடற்கரை நகரங்கள் மூழ்கும் ,அபாயம் ஆய்வு ,அறிக்கை,

புதுடில்லி:பருவநிலை மாற்றம் காரணமாக மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள கடற்கரை பகுதிகள் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை அடுத்து பருவநிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூஜ்ஜியம் அளவுஇதனால் மழைப் பொழிவு, வறட்சி, வெயில் மற்றும் பனி ஆகியவை அதீதமாக உள்ளன. பனி மலைகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பருவநிலை மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், 2070க்குள் கரியமில வாயுக்களின் பயன்பாட்டை பூஜ்ஜியம் அளவுக்கு குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதி ஏற்றன.

மேலும், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த சி.ஓ.பி., 26 எனப்படும், ஐ.நா.,வின் 26வது பருவ நிலை மாநாட்டில் புவியின் தட்பவெப்ப அளவை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க உறுதி ஏற்கப்பட்டது.அதிக வாய்ப்புபருவநிலை மாற்றம் காரணமாக, நம் நாட்டின் பல பகுதிகளில் அதீத மழை பெய்து வருவதை சமீப ஆண்டுகளில் காண முடிகிறது.

இந்நிலையில் 'கிளைமேட் சென்ட்ரல்' என்ற லாபநோக்கு இல்லா ஆராய்ச்சி குழு, பருவநிலை மாற்றத்தால் நம் நாட்டில் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் விபரம்:கடல் நீர்மட்ட உயர்வால், 50 பெரிய கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளில் அந்த நகரங்கள் இப்போதே ஈடுபடத் துவங்க வேண்டும்.

மஹாராஷ்டிராவின் மும்பை, மேற்கு வங்கத்தின் சுந்தர்பன்ஸ் மற்றும் கோல்கட்டா கடற்கரை பகுதி, ஒடிசாவின் கட்டாக், குஜராத்தின் சில கடற்கரை நகரங்கள் 2030க்குள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இன்னும் 100 ஆண்டுளுக்கு பின், 2120ல் நாட்டின் பெரும்பாலான கடற்கரை நகரங்கள் கடலில் முழுவதுமாக மூழ்கிவிட அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-நவ-202122:32:07 IST Report Abuse
sankaseshan கோவில் எங்களது சந்தேகமில்லை உங்களது இல்லை , ஆனால் கோவில் சொத்துக்கு ஆசை படுவீர்கள் நீ திருட்டு திராவிடன் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறாய் சம்பத்து.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
06-நவ-202121:00:00 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா The volume of water they displace as ice is about the same as the volume of water they add to the ocean when they melt. As a result, sea level does not rise when sea ice melts.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-நவ-202117:44:47 IST Report Abuse
DVRR சென்னை ஏன் வரவில்லை அந்த பட்டியலில்???
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
07-நவ-202111:27:32 IST Report Abuse
SaiECR ல கால் கிரவுண்ட் ரெண்டரை கோடின்னு கூவுறவங்க தடுத்திட்டாங்க...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
08-நவ-202104:59:55 IST Report Abuse
meenakshisundaram'சென்னை அறிவாலயம் இருக்கும் இடம் ஆச்சே -வரும் ஆனா வராது ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X