தீபாவளி வாழ்த்து கூறாத முதல்வர்: மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்| Dinamalar

தீபாவளி வாழ்த்து கூறாத முதல்வர்: மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

Updated : நவ 05, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (117) | |
ராமேஸ்வரம்:''தீபாவளி வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் அவர் அளித்த பேட்டி:நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை தரை, ரயில், விமான வழி போக்குவரத்தில் இணைப்பதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான கட்டமைப்பு பணி ஏற்கனவே

ராமேஸ்வரம்:''தீபாவளி வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.



latest tamil news




ராமேஸ்வரத்தில் அவர் அளித்த பேட்டி:நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை தரை, ரயில், விமான வழி போக்குவரத்தில் இணைப்பதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான கட்டமைப்பு பணி ஏற்கனவே முடிந்துள்ளது. பிரதமர், மக்களுக்கு தீபாவளி பரிசாக எரிபொருளுக்கு விலை குறைத்ததும், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், 'வாட்' வரியை குறைத்து உள்ளனர்.


latest tamil news




இதற்கும் மேலாக புதுச்சேரியில், 19 ரூபாய் குறைந்து உள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் எரிபொருளுக்கு விலை குறைப்பதாக பொய் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது வாட் வரியை குறைக்காமல் மக்களை ஏமாற்றுவது, கண்டனத்திற்குரியது.பிற மத பண்டிகைக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், பெரும்பான்மை ஹிந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் புறக்கணித்து, நவீன தீண்டாமையை புகுத்துகிறார். இதற்காக ஸ்டாலின், மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X