சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 18 அதிகாரிகள். தூக்கியடிப்பு!

Updated : நவ 06, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (25)
Advertisement
சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில், 18 இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள்,வெவ்வேறு மாநகராட்சிகளுக்கு துாக்கியடிக்கப்பட்டனர். 'டெண்டர்' முறைகேடுவிசாரணையை தொடர்ந்து, அவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இது, கோவை உள்ளிட்ட பிற நகரங்களின் மாநகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளிடம் கிலியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை
 சென்னை மாநகராட்சி, ஒரே நாள்,  18 அதிகாரிகள். தூக்கியடிப்பு!


சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில், 18 இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள்,வெவ்வேறு மாநகராட்சிகளுக்கு துாக்கியடிக்கப்பட்டனர். 'டெண்டர்' முறைகேடுவிசாரணையை தொடர்ந்து, அவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இது, கோவை உள்ளிட்ட பிற நகரங்களின் மாநகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளிடம் கிலியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை மாநகராட்சியில், கடந்த ஆட்சியின் போது பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. அவற்றில் பல பணிகளுக்கு விதிகளை மீறி, தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையை துவக்கினர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள், டெண்டர் எடுத்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர்.


லஞ்சம்அடுத்த கட்டமாக, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், பொறியியல் பிரிவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி அதிகாரிகள், வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டனர்.சமீபத்தில் சென்னை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் விதிகளை மீறி விடப்பட்ட, 500க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.குறிப்பாக நகரில் ௪௩ இடங்களில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான ௧௨௦ கோடி ரூபாய் டெண்டர்; ௧,௫௦௦ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான ௧௧௬ கோடி ரூபாய்க்கான டெண்டர்
உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.

அத்துடன் டெண்டர் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக, ௧௨௭ இளநிலை பொறியாளர்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு துாக்கி அடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநகராட்சி பணியில் சேர்ந்ததில் இருந்து, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர்கள்.


கடந்த ஆட்சியின் போது, பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்த பொறியாளர்கள், அயல் பணி அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு மாற்றலாகி வந்தனர். இப்பணிக்கு வர, ஒவ்வொருவரும் பெரும் தொகை லஞ்சமாக கொடுத்துள்ளனர். அவ்வாறு வந்தவர்கள், டெண்டர் பணிகளிலும் தலையிட்டுள்ளனர்.மாநகராட்சி சார்பில் சாலை போடுதல், பாலம் கட்டுதல், மழை நீர் வடிகால் அமைத்தல், கட்டடம் கட்டுதல் என அனைத்து பணிகளையும் கவனித்துள்ளனர். அயல் பணியில் வந்தவர்கள், முறைகேடு செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், துணிச்சலாக ஈடுபட்டுஉள்ளனர்.


அரசுக்கு பரிந்துரைஇதை அறிந்த உயர் அதிகாரிகள், அவர்களை இடமாற்றம் செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.அதன் காரணமாக, சென்னை மாநகராட்சியில் அயல் பணி அடிப்படையில் மாற்றலாகி வந்த, 12 இளநிலை பொறியாளர்கள், ஆறு உதவிப் பொறியாளர்கள், திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், கடலுார் உட்பட பல்வேறு மாநகராட்சிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.


ஒரே நாளில், சென்னை மாநகராட்சியில், 18 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், சென்னையில் இருந்து மாற்றப்பட்டுள்ள 18 அதிகாரி களுக்கு பதிலாக, புதியவர்கள் இன்னும் நியமிக்கப் படவில்லை.அப்பணிகளுக்கு கோவை, திருப்பூர், மதுரை என வெவ்வேறு நகரங்களில் இருந்து பொறியாளர்கள் கொண்டு வரப்படுவர் என்பதால், அங்கு பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் கிலியில் உள்ளனர்.அத்துடன் மற்ற சில உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால், அங்கு பணிபுரிவோரும் கலக்கம் அடைந்துள்ளனர்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-நவ-202118:57:48 IST Report Abuse
D.Ambujavalli 'இங்கு சம்பாதித்தவன் அங்கு போவான், அங்கு முடித்தவன் இங்கு வருவான் இதற்குப் பெயர் 'தண்டனை' விடியல் ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் போல எத்தனை நேர்மையாக நடக்கிறது
Rate this:
Cancel
sakthivel selvakumar - virudhunagar,இந்தியா
06-நவ-202117:57:34 IST Report Abuse
sakthivel selvakumar பனியில் கோடிகளை தவறு செய்பவர்களுக்கு இடமாற்றம் ஒரு தண்டனையா? வேறு எதுவுமே இல்லைய....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-நவ-202117:47:29 IST Report Abuse
Bhaskaran Athepol pallaavaram nagaraatchiyiyieyum ellorayum thookkiyadikabvendum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X