புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தியோர் அமெரிக்கா வருவதற்கான பயண கட்டுப்பாடுகள், 8ம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும்' என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.கொரோனா பரவலை தொடர்ந்து, சர்வதேச விமான சேவை கடந்த ஆண்டு துவக்கத்தில்நிறுத்தப்பட்டது.
பல்வேறு தளர்வுகள்
தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை துவங்கப்பட்டது. பயணியருக்கான கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.இதற்கிடையே அமெரிக்கா வரும் சர்வதேச பயணியருக்கான கொரோனா கட்டுப்பாடுகளை, 8ம் தேதி முதல் முழுமையாக நீக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
பயண வழிகாட்டுதல்களில் தளர்வுகள் அறிவிக் கப்பட்டாலும், கொரோனா பரிசோதனை கண்டிப்பாக பின்பற்றப்படும்.பிற நாட்டினர் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தாத அமெரிக்கர்கள்,
நிரந்தர குடியுரிமை பெற்றோர் மற்றும் தடுப்பூசியின் ஒரு 'டோஸ்' செலுத்தியுள்ளோர் விமானம் ஏறுவதற்கு முதல் நாள் பரிசோதனை செய்து, பாதிப்பில்லா சான்று வைத்திருக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி செலுத்தியோர், பயணத்திற்கு மூன்று நா
ட்களுக்கு முன் பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பு இல்லை என உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாத 18 வயது நிறைவடையாதோரும் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.
பரிசோதனை
அவர்களுடன் பயணிக்கும் நபர் தடுப்பூசி செலுத்தியவராக இருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னும், தடுப்பூசி செலுத்தாதவர் எனில் முதல் நாளும் பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்று வழங்க வேண்டும்.உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியோரை மட்டுமே விமானநிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE