பெட்ரோல், டீசல் வரி குறைக்க பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Added : நவ 06, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:'பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசும் குறைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தீபாவளி முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு ௫ ரூபாய்; டீசலுக்கு ௧௦ ரூபாய் குறைத்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால், சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை, 101 ரூபாய் 40 காசுக்கும், டீசல்
 பெட்ரோல், டீசல் வரி குறைக்க  பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை:'பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசும் குறைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தீபாவளி முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு ௫ ரூபாய்; டீசலுக்கு ௧௦ ரூபாய் குறைத்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால், சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை, 101 ரூபாய் 40 காசுக்கும், டீசல் லிட்டர் 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது.

இதைத் தொடர்ந்து அசாம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, ௭ ரூபாய் குறைத்துள்ளன.இதனால், அந்த மாநிலங்களில் டீசல் விலை, 17 ரூபாய்; பெட்ரோல் விலை, 12 ரூபாய் குறைந்து உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், பெட்ரோல் மீதான வரி, 2 ரூபாய்; டீசல் மீதான வரி, 7 ரூபாய்; பீஹாரில் பெட்ரோல் மீதான வரி, 3 ரூபாய் 20 காசு; டீசல் மீதான வரி, 3 ரூபாய் 90 காசு குறைக்கப்பட்டுள்ளது.ஒடிசாவில் 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மவுனம் சாதித்து வருவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்; டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தனர்; டீசல் வரியை குறைக்கவில்லை. எனவே, தமிழக அரசும் குறைந்தபட்சம், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 2 ரூபாய்; டீசல் மீதான வரியை 4 ரூபாய் குறைக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-நவ-202108:14:39 IST Report Abuse
RajanRajan முதலில் இப்போ பெட்ரோல் டீசல் விலை குறைந்ததற்கு விலைவாசியை குறைக்க சொல்லி வணிகர் சங்கங்களின் முன் ஆர்ப்பாட்ட பண்ணி நீங்களும் எதிர்கட்சியாய் இருந்து மக்களுக்கு சேவை செய்யுறோம்னு காட்டுற வழிய பாப்பியா சும்மா உதார் வுடுறீங்களாப்பா. எந்த அரசும் இந்த சந்தர்ப்பத்தை சுட்டிக்காட்டி விலைவாசி குறைப்பை வலியுறுத்த முன் வரவில்லையே ஏன். ஒரு தபா ஏற்றின விலையை குறைக்க எவனுமே முன்வருவதில்லை. கேள்வி கேட்டால் அப்போ எங்களுக்கு நஷ்டம் இப்போ ஈடு செய்யுறோம்னு சப்பை கட்டு காட்டுவானுங்க. பொட்டி கடைகாரங்க வரை பலகாரம் சைஸ் டீ அளவு வரை குறைத்து விலையையு கூட்டி மக்களை மக்களே உறிஞ்சி திருடுற மனா போக்கு தான் நாம் கண்டது. நியாயமாய் வாழுற வழிய பற்றி சிந்திக்கிறதே இல்லை.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
06-நவ-202107:55:38 IST Report Abuse
rajan பன்னீர் நிதி அமைச்சராக இருந்தபோது எவ்வளவு வரி குறைத்தார் என்பது ரகசியம் அவருக்கும் தெரியாத ரகசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X