மயிலாடுதுறை:'துறை ரீதியான ஞானம் இல்லாதவராக அறநிலையத்துறை அமைச்சர் உள்ளார்' என பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை ரூ.5 டீசலுக்கு ரூ.10 குறைத்துள்ளது. மத்திய அரசு தனது கலால் வரி குறைத்துள்ளது. பா.ஜ. ஆளும் 9 மாநிலங்களில அரசுகள் குறைத்துள்ளது.
ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியை பிடித்த ஊராட்சி அரசு தனது மாநில அரசு வரியை குறைத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.
கோவில் அபகரிப்பில் தி.மு.க. அரசு ஈடுபட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்து ஐந்தரை மாதங்களில் பல்வேறு கோவில்களை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அறநிலையத்துறை சட்டம் 1953இன் படி செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அறநிலையத் துறை ஒரு கோவில் சரியாக நிர்வாகம் செய்யப்படவில்லை என்றால் எடுத்து சரிசெய்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் பழைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் 60 ஆண்டுகள் 70 ஆண்டுகள் கோவிலை அபகரித்துக்கொண்டு நகைகளை கபளிகரம் செய்யக் கூடாது. அதனால் சட்டப்படி அறநிலையத் துறை கோவில்களை எடுத்துக்கொள்ள முடியாது. அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோவில்கள் உள்ளன என்று கூட தெரியாத நிலையில் உள்ளார்.
நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயன் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளதாக அப்போது தெரிவித்தார். சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர் பாபு 38 ஆயிரத்து 667 கோவில் உள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்றால் மீதி 5454 கோவில்கள் எங்கே. தனது துறை ரீதியான ஞானம் இல்லாதவராக அறநிலையத் துறை அமைச்சர் உள்ளார்.
அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது. கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக் கொள்வதை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE