சென்னை:'முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு அவலத்தை, தங்களுடைய சொந்த வன்மங்களால் வீணாக்கியுள்ளனர்' என்று தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அஸ்வத்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
இருளர் சமுதாயத்தினர் வாழ்க்கை தரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஓட்டு வங்கி இல்லாததால், திராவிட அரசுகளால் கைவிடப்பட்டவர்கள்.அவர்களில் ஒருவரை காவல் துறை துன்புறுத்தி கொலை செய்தது, ஒரு உண்மை சம்பவம். அதை படமாக எடுத்ததாக சொல்கின்றனர்.
இறந்தவர், வழக்காடிய வழக்கறிஞர் பெயர் மற்றும் அடையாளங்கள் மாற்றப்படவில்லை. ஆனால், குற்றம் செய்தவர்களின் பெயர் அடையாளங்கள் மட்டும் வன்மத்துடன் மாற்றப் படுகிறது. குற்றவாளி பெயரை மறைப்பது, மாற்றுவது, குற்றவாளிக்கு ஆதரவாக செய்யும் அயோக்கியத்தனம் இல்லையா.
முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு அவலத்தை, தங்களுடைய சொந்த வன்மங்களால் வீணாக்கியுள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் படத்தை பார்த்து விட்டு, மிகவும் நெகிழ்ந்து பாராட்டியதாக அறிந்தேன். படத்தை பாராட்டுவது இருக்கட்டும். முதலில் இருளர் சமூகத்தினருக்கு, பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கி, நல்லது செய்யட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE