இது உங்கள் இடம்: ஊழலை ஒழிக்க கங்கணம்!

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021 | கருத்துகள் (62)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கவர்னர் ரவி மற்றும் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், தமிழக அரசியலில் இருந்து ஊழலை ஒழித்து, மக்களுக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கச் செய்வதே தங்களின் குறிக்கோள் என்றுஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
latest tamil newsபா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கவர்னர் ரவி மற்றும் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், தமிழக அரசியலில் இருந்து ஊழலை ஒழித்து, மக்களுக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கச் செய்வதே தங்களின் குறிக்கோள் என்று கூறியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் என்ன தான் ஊழலற்ற ஆட்சி நடத்த முயன்றாலும், அதிகாரத்தில் அடுத்த நிலையில் உள்ளோர் அதற்கு முழு ஆதரவு அளிக்காமல், 'கமிஷனுக்காக' அலைவது தொடர்கிறது. ஊழல் ஒழிந்தாலே, நாடு முன்னேறி விடும்! எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிற்கும் குழு அமைக்கும் முதல்வர் ஸ்டாலின், ஊழலை ஒழிக்க ஓர் உயர் மட்டக் குழு அமைக்காதது ஏன்?

இன்றைய நிலையில், அது தானே முக்கிய தேவை. ஊழல், நம் நாட்டு வளர்ச்சியின் அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கி விடுகிறது. உறுதியற்ற கட்டடம், தகுதியற்ற சாலை ஆகிய அனைத்திற்கும் காரணம் ஊழல் தான். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஊழலால், மக்களின் வரிப்பணம் வீணாகுகிறது.


latest tamil news
சமதர்ம சமுதாயம் அமைவதற்கு குந்தகம் விளைவிக்கிறது. தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு தகுந்த பொறுப்பு வழங்கப்படுவதில்லை. ஊழலுக்கு துணைபுரியும் அதிகாரிகளுக்கே, முக்கிய பொறுப்புகள் கிடைக்கின்றன.
திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. இதை வலிமையான கரத்துடன் ஒடுக்க வேண்டும்.

கவர்னர் ரவி, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர், தமிழகத்தில் ஊழலை ஒழிக்க, கங்கணம் கட்டி களத்தில் குதித்திருப்பது, மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
07-நவ-202102:09:55 IST Report Abuse
Mano இந்த மோடி கொரோனா மூலம் அடித்த கொள்ளையை முதலில் ஒழிக்கட்டும்.
Rate this:
Cancel
shiv - chennai,இந்தியா
06-நவ-202123:47:11 IST Report Abuse
shiv First ask them to solve corruption in BJP rule state in TN far better compare to up and North state .... Also in rafael deal corruption and central Highway department corruption to collect tol gate money corruption than come here don't fool people of TN WE STAND ALWAYS DMK OR ADMK......... Do not dream BJP OR USELESS RAVI IN D CONFUSION IN ASSAM STATE
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
06-நவ-202123:08:58 IST Report Abuse
S.kausalya ஐயோ பாவம் கவர்னர், இவர்களெல்லாம் யாருமே கண்டுபிடிக்க முடியாத படி, ஆதாரம் இல்லாத படி scientific agaa ஊழல் செய்பவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X