சீறிப்பாயும் கிடா சண்டைக்கு தடா ; மீட்க ஆர்வம் காட்டும் ராமநாதபுரம் இளைஞர்கள்

Added : நவ 06, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டு போட்டிகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக 'கிடா' சண்டை, சேவல் சண்டை சிறப்பு வாய்ந்தாகும். இத்தகையை போட்டிகளை நடத்த தற்போது அரசு தடைவிதித்துள்ளது.பாரம்பரிய வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், என்றாவது ஒருநாள் ஜல்லிகட்டுபோட்டிக்கு தடை நீங்கியது போல சேவல், 'கிடா' சண்டை போட்டிக்கும்


தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டு போட்டிகளில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக 'கிடா' சண்டை, சேவல் சண்டை சிறப்பு வாய்ந்தாகும். இத்தகையை போட்டிகளை நடத்த தற்போது அரசு தடைவிதித்துள்ளது.latest tamil news
பாரம்பரிய வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், என்றாவது ஒருநாள் ஜல்லிகட்டுபோட்டிக்கு தடை நீங்கியது போல சேவல், 'கிடா' சண்டை போட்டிக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் இன்றளவும் சண்டைச்சேவல், கிடாக்களை பாரம்பரிய கவுரவம், பழங்கால முறைப்படி பாதுகாத்து, அவற்றிற்குரிய பயிற்சி அளித்து வருகின்றனர்.''ராம்நாடு கோட்ஸ் பைட்டர்'' என்ற பெயரில் ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் சின்னக்கடை எச்.முகமது ஆசிக் 18, கேணிக்கரை பி.முகமதுபாசித் 20 மற்றும் மாரியம்மன்கோயில் தெரு டூவீலர் டீலர் ஜி.வினோத் 20 ஆகியோர் தங்களது பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் உதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சண்டை 'கிடா' க்களை கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவற்றிற்குரிய பயிற்சியை அளித்து வருகின்றனர்.


வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம்கிடா வளர்க்க உதவும் உறவுகள்பி.முகமது பாசித் கூறுகையில்,சென்னையில் அண்ணன் வீட்டிற்கு கல்லுாரி விடுமுறையின் போது செல்வது வழக்கமாகும். அவரும் சண்டை கிடா வளர்த்து வந்தார். அவருடன் கிடா சண்டை போட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்வோம். அப்போது அந்தபோட்டியின் விறுவிறுப்பு, கைதட்டல் நாமும் சண்டை கிடா வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்தது.நண்பன் வினோத், அண்ணன் ராக்கியும் சண்டை கிடா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். இவர்களின் வழிகாட்டுதலுடன் 3 பேரும் ஆளுக்கொரு கிடா வாக வளர்த்து தொடர்ந்து பயிற்சி அளித்து வளர்க்கிறோம். எங்களை தவிர்த்து மற்றவர்கள் கிடாவை அவ்வளவு எளிதாக நெருங்க முடியாது. வெள்ளை (உமர்) நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மதுரை கிராமப்பகுதிகளை போல அபிராமம், கமுதி, பரமக்குடி பகுதிகளில் தற்போது தடை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிடா சண்டையில் ஆர்வம் முள்ள 200க்குமேற்பட்டவர்கள் இணைந்து ''ராம்நாடு கோட்ஸ் பைட்டர்'' என்ற பெயரில் குரூப் உள்ளது.சண்டை கிடா வளர்ப்பு குறித்து கூறியதாவது:


latest tamil news

கிடாவுக்கு சத்தான உணவு என்ன ?ஸ்பெஷல் உணவுசாதாரண ஆடுகள் போல காய்கறி, புற்களை மட்டும் சண்டை கிடாக்களின் வலிமையை அதிகரிக்க மூன்று வேளைகளிலும் சத்தான உணவுகளை வழங்குகின்றனர். காலையில் 5 அகத்தி கீரைக்கட்டுகள், காலை 11:00மணிக்குமேல் துவரம் பருப்பு துாசி, 1 மணிநேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும். 2:00மணிக்கு கிடாவிற்கு செரிமானத்திற்காக அசை போடும் வகையில் வைக்கோல் மற்றும் இரவு உடைகுருணை, கொம்பு பெரிதாகுவதற்காக இரும்பு சோளம், பச்சரி வழங்குகின்றனர்.

4 கி.மீ., நடையும், நீச்சல் பயிற்சிபோட்டிகளுக்கு தயாராகும் வகையில் தினமும் முட்ட பழகுவதற்காக பெரிய தடிமான மரக்கட்டையை ஊன்றி வைத்துள்ளனர். இவற்றில் முட்டி..முட்டி.. கிடா எப்போது சண்டைக்கு தயாராக உள்ளது. குறிப்பாக போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு தினமும் 4 கி.மீ., வரை நடைப்பயிற்சியும், அருகேயுள்ள ஊரணி, கண்மாய்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒரு கிடாவின் விலை ரூ.2 லட்சம்செம்மறிஆடு வகையைச் சேர்ந்த நாட்டுகிடா எட்டையபுரம் குரும்பை ஆடு, கர்நாடக கோங்கு, ஆகியவற்றை 5 முதல் 8 மாதகுட்டியாக வாங்கி வளர்க்கலாம். போட்டிகளில் வெற்றிபெறும் கிடா வை வாங்கி செல்கின்றனர்.

கிடாவின் கம்பீரமான தோற்றம், உடல் வலிமை உள்ளிட்டவை பார்த்து ஒரு கிடா ரூ.50ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2லட்சம் வரை கூட விலைபோகும்.போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போல பொங்கல் விழாவின்போது கிடா சண்டை கிராமங்களில் விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். ஜல்லிக்கட்டில் மனிதர்கள் காயமடைகின்றனர், கிடாச்சண்டையில் பெரியஅளவில் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆகையால் ஜல்லிக்கட்டு போல, வரும் பொங்கல் பண்டிகையின்போது கிடா சண்டை போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
06-நவ-202121:59:38 IST Report Abuse
Nagercoil Suresh கீழ்ப்படியாமல், படிக்கவும் செய்யாமல் அலையும் பிள்ளைகளை பார்த்து முன்னோர்கள் ஆடு மேய்க்க தான் லாயக்கு என்பார்கள்...
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
06-நவ-202117:35:38 IST Report Abuse
Samathuvan அடுத்ததாக ஒரு நல்ல தலைப்பு நம்ம ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு கிடைச்சுப்போச்சுடோய்.
Rate this:
Cancel
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
06-நவ-202109:56:59 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy கிடா வெட்டி தின்ன தடை கிடையாது. இது நமது பாரம்பரியம் அதனால் தடை - கிருத்துவ பீட்டா , காங்கிரஸ் அமைப்பினால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X