ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. அதனால் ஹிந்துக்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு இல்லை. ஹிந்துக்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க கூடாது. - தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை .

பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இப்படித் தான் பல காலமாக சொல்லி வருகின்றன. எனினும், ஹிந்துக்கள் கண்டுகொள்வதில்லை. அவ்வாறு அசட்டையாக இருப்பதால் தான், அவர்கள் வாழ்த்து சொல்வதில்லை
தீபாவளிக்கான வாழ்த்தை, அமெரிக்க அதிபர் பிடன் சொல்லி விட்டார்; பிரிட்டன் பிரதமர் சொல்லி விட்டார் என்கின்றனர். அண்ணாதுரை சொல்லவில்லை; கருணாநிதி சொல்லவில்லை. அதனால் முதல்வர் ஸ்டாலினும் சொல்ல மாட்டார். -தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் அறிக்கை
அப்படியானால் அண்ணாதுரை, கருணாநிதி சொல்லாததை முதல்வர் ஸ்டாலின் செய்ய மாட்டாரா; சொல்ல மாட்டாரா? கட்சித் தலைவராக இருப்பது வேறு; முதல்வர் பதவி என்பது வேறு. முதல்வர், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர்!
பிரதமர் மோடி சமீபத்தில் ராணுவ சீருடை அணிந்து, எல்லையில் வீரர்களுடன் உரையாடியுள்ளார். முன்னாள் பிரதமர்கள் லால் பகதுார் சாஸ்திரி, இந்திரா, வாஜ்பாய் போன்றவர்கள் முழு ராணுவ சீருடையில் பாக்., வெற்றியை கொண்டாடினால் எப்படி இருந்திருக்கும்? - பா.ஜ.,விலிருந்து, திரிணமுல் காங்.,கில் இணைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை:
இதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு, 'காண்டு?' ராணுவ சீருடையில் மோடியை பார்த்ததில் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். நானும், உங்களுடன் இருக்கிறேன் என்ற உணர்வை வீரர்களின் உடை, அவர்களுக்கு உணர்த்தியுள்ளதே!
'தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து சொல்லவில்லை' என்கின்றனர், சங் பரிவார் அமைப்பினர். அந்த பண்டிகைக்கு சொல்லப்படும் தேவர்கள் - -அசுரர்கள் சண்டை பற்றி, திராவிட இயக்கத்தாருக்கு வேறு பார்வை இருப்பதால், அவர்கள் வாழ்த்து சொல்வதில்லை. அது தெரிந்தே, தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். - தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை

நீங்கள் சொல்வது கட்டுக்கதை. தீபாவளி பண்டிகையின் உண்மையான தத்துவம், மன இருளை அகற்றி, மனதில் ஒளி பரவச் செய்வதே. அதாவது, மகிழ்ச்சியை பரவச் செய்வதே. உங்களின் குதர்க்க கருத்தை, ஹிந்துக்களில் பெரும்பான்மையினரே நம்புவதில்லை!
நெல்லை மாநகராட்சி பாளை மண்டல அலுவலக ஹிந்து ஊழியர்களை, தீபாவளி கொண்டாட விடாமல், மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாதுஷா, பணி செய்யுமாறு நிர்ப்பந்தபடுத்தியுள்ளார். தகவல் அறிந்து நாங்கள் அளித்த புகாரின்படி, காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு, வேலையில் இருந்த ஹிந்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை
பண்டிகை நாளில் இப்படி எல்லாமா செய்வர்... வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE