அமெரிக்கா உயிரியல் பூங்காவில் 2 கழுதைப்புலிக்கு கொரோனா

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021 | |
Advertisement
டென்வர்: அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் அதிக எதிர்ப்பு சக்தியுடன் வாழக்கூடிய இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.உயிரியல்
அமெரிக்கா, டென்வர், உயிரியல் பூங்கா, 2 கழுதைப்புலிக்கு கொரோனா,

டென்வர்: அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் அதிக எதிர்ப்பு சக்தியுடன் வாழக்கூடிய இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.


latest tamil news



உயிரியல் பூங்காவில் உள்ள 22 வயதான கோஸி, 23 வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதன்பின் மற்றவிலங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கழுதைபப்புலியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்று தேசிய கால்நடை சேவை ஆய்வகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படன. இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டென்வர் வனஉயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்ததாவது: கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடினமானது. அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை கழுதைப்புலிகள், ஆந்த்ராக்ஸ், ரேபிஸ், போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களையும் தாங்கி உயிர்வாழக் கூடியவை கழுதைப்புலிகள். அவைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மற்ற கழுதைப்புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X