பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 23 மாநிலங்களில் குறைப்பு

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு முறையே 5 மற்றும் 10 ரூபாய் குறைத்ததை அடுத்து, கர்நாடகா, மிசோரம், புதுச்சேரி, உத்தரகண்ட், உ.பி., ம.பி., அசாம், மணிப்பூர், பீஹார், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா, சண்டிகர், திரிபுரா, உள்ளிட்ட 23 மாநில அரசுகள் ‛வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல், வாட்வரி, குறைப்பு, மாநில அரசு, மத்திய அரசு

புதுடில்லி: தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு முறையே 5 மற்றும் 10 ரூபாய் குறைத்ததை அடுத்து, கர்நாடகா, மிசோரம், புதுச்சேரி, உத்தரகண்ட், உ.பி., ம.பி., அசாம், மணிப்பூர், பீஹார், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா, சண்டிகர், திரிபுரா, உள்ளிட்ட 23 மாநில அரசுகள் ‛வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு கடந்த நவ.,3ம் தேதி அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து 23 மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனை தொடர்ந்து, பெட்ரோல் விலை, லிட்டருக்கு கர்நாடகாவில் ரூ.13.35ம், புதுச்சேரியில் ரூ.12.85ம், மிசோரமில் ரூ12.62ம் குறைந்தது. டீசல் விலை கர்நாடகாவில் ரூ.19.49ம், புதுச்சேரியில் ரூ.19.08 ம் மிசோரத்தில் ரூ.18.34 ம் குறைக்கப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.10.20ம், டீசல் விலை ரூ.15.22ம் குறைந்துள்ளதுலே யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.13.43, டீசல் விலை ரூ.19.61 குறைக்கப்பட்டது.


latest tamil news



ம.பி.,யில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை, ஹரியானாவில் ரூ.12 பீஹார், ஒடிசாவில் ரூ.3, திரிபுரா, கோவா, மணிப்பூர் அசாம் மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் ரூ.7, உத்தரகண்டில் ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளன.

உ.பி., குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச அரசும் விரைவில் விலை குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், டில்லி, மேற்கு வங்கம், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, மேகாலயா, அந்தமான், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை. மற்ற மாநில அரசுகளை பின்பற்றியும், விலையை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
06-நவ-202123:29:57 IST Report Abuse
m.viswanathan ஏண்டா நாட்டு மக்களை இப்படி நல்லா அனைத்து அரசியல் வாதிங்கள் , அரசு அதிகாரிகள் சேர்ந்து ஏமாத்துறிங்க , அந்நியனிடம் அடிமையாய் இருந்த போது இருந்ததை விட மிக மோசமாக அல்லவா கொள்ளை அடிக்கிறீங்க , மக்கள் நாள் திட்டமாம் , ஒவ்வொரு மாநிலத்தில் அந்த அந்த மொழியில் சொல்லி , ஏமாற்றி , ஒட்டு பொறுக்கிகளா , நல்லா இருப்பிங்களா
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
06-நவ-202119:38:48 IST Report Abuse
Sathyanarayanan Subramanian நாத்தீக அரசு வாட் வரியை குறைப்பது சந்தேகம் தான்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
06-நவ-202119:24:05 IST Report Abuse
Soumya விடியாத கேடுகெட்ட விடியலுக்கு பத்து வருட பசி கட்டிங் கமிஷன் கரப்ஷன் தான் முக்கியம்
Rate this:
selva - Chennai,இந்தியா
06-நவ-202121:34:42 IST Report Abuse
selvaபோங்க போயி நல்ல தூங்குங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X