காஷ்மீரின் பள்ளத்தாக்கில் உறைந்து கிடக்கும் உண்மைகள்

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021
Share
Advertisement
சித்தாரா சாரங்கன்சென்னையைச் சார்ந்தவர் வழக்கறிஞர் ஒவியர் மற்றும் புகைப்படக் கலைஞர்ஒரு வழக்கிற்காக காஷ்மீர் பற்றி விரிவாக படித்தவருக்கு காஷ்மீரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.தனது ஆர்வத்தின் அடிப்படையில் சமீபத்தில் காஷ்மீர் சென்று அதன் அகத்தையும் புறத்தையும் கேமிரா மூலமாக அள்ளிக் கொண்டு வந்து அதை சென்னை நுங்கம்பாக்கம்


latest tamil news


சித்தாரா சாரங்கன்
சென்னையைச் சார்ந்தவர் வழக்கறிஞர் ஒவியர் மற்றும் புகைப்படக் கலைஞர்



latest tamil news


ஒரு வழக்கிற்காக காஷ்மீர் பற்றி விரிவாக படித்தவருக்கு காஷ்மீரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.


latest tamil news


Advertisement

தனது ஆர்வத்தின் அடிப்படையில் சமீபத்தில் காஷ்மீர் சென்று அதன் அகத்தையும் புறத்தையும் கேமிரா மூலமாக அள்ளிக் கொண்டு வந்து அதை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ரீஇமேஜினிங் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார்.இந்த கண்காட்சியில் உள்ள படங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அழகோடும் அங்கு வாழும் மக்களின் உணர்வோடும் பின்னிப் பினைந்துள்ளது.


latest tamil news


கம்பீரமான இமயமலையில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத இயற்கை அழகு கொண்டது.அடர்த்தியான பசுமைக் காடுகள், பனி மூடிய மலைகள்,வெள்ளியை உருக்கிவிட்டது போன்ற நதிகள் ஆகியவை காஷ்மீரின் கம்பீரத்தை மென்மேலும் உயர்த்துகிறது.


latest tamil news


இருப்பினும் காஷ்மீரின் உண்மையான அழகு அங்கு வாழும் மக்களிடம் ஒளிந்திருக்கிறது.அந்த அமைதிப் பள்ளத்தாக்கை பீடித்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்ற அந்த எளிய மக்கள்தான் காவலாளியாக இருக்கின்றனர்.தங்கள் மண் மீதான பற்று காரணமாக தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை புன்னகையோடு ஏற்றுக் கொள்கின்றனர்.


latest tamil news


எதையும் வெளிப்படையாக பேசமுடியாது,பயங்கரவாதிகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே இருக்கின்றனர் ஆனால் அவர்கள் பிடிபடும்வரை தெரிவதில்லை,இங்கு மிகவும் மலிவானது மனித உயிர்கள்தான் சொர்க்கத்தின் துண்டு ஒன்று காஷ்மீர் என்ற பெயர் கொண்டிருந்தது ஒரு காலம் ஆனால் அது பயங்கரவாதத்திற்கு பலியாகிக் கொண்டிருப்பதுதான் வேதனையான இந்தக் காலம் மீண்டும் அந்தக் காலம் வரும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.இதுதான் உண்மையான இன்றைய காஷ்மீர் இந்த உண்மைத் தன்மையை முடிந்த வரை எனது கேமிராவில் காட்டியுள்ளேன் என்று கூறிய சித்தாரா சாரங்கனின் புகைப்பட கண்காட்சி இன்றுடன் (07/11/2021) நிறைவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X